Posts

Showing posts from May 15, 2013
அரசு தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழி பள்ளிகளாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பேராபத்து தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழி கல்விக்கு வேட்டு வைத்துள்ளது. அன்னைத்தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத்தந்து ‘‘மெல்லத்தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்’’ எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும். பெற்றோர்கள் மீது பழி தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசு பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவிடாமல் தடுப்பது எது? தமிழ் பயிற்றுமொழிதானா, இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ம
பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை- ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளபகுதி நேர கணினி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும் தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட கணினி பட்டயப்படிப்பு கல்வித்தகுதி பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. உத்தேச பதிவுமூப்பு: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமையற்றவர்கள் 29.08.2005 வரையிலும், பிற்படுத்த வகுப்பினர் முன்னுரிமையற்றவர்கள் 28.07.2000 வரையிலும், பொது போட்டியாளர் முன்னுரிமையற்றவர்கள் 22.05.2002 வரையிலும் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விபரத்தை வரும் 17ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம். அடையாளஅட்டை மற்றும் பதிவுசான்றிதழ், கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : ஜெயலலிதா பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியமர்த்த புதிதாக 1000முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஆற்றிய உரையில், மக்கள் தொகை 300 பேர் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு தொடக்கப்பள்ளி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 54 குடியிருப்புபகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த 54 குடியிருப்புப் பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதையும், அப்பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.  உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்த வரையில்,5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படாதநிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியிலிருந்து 2013-2014 ஆம்கல்வியாண்டில் 50 நடுநிலைப் பள்
டி.இ.டி. : அறிவிக்க தயங்கும் டி.ஆர்.பி., கையை பிசையும் பயிற்சி மையங்கள். ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் தேதியை அறிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம், காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஜூனுக்குள் பயிற்சியை முடித்து விடலாம் என, கணக்குப் போட்டிருந்த பயிற்சி மையங்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றன. கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 6.72 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். காலியிடங்களை விட மிகக் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதால், டி.ஆர்.பி., உடனடியாக மறு தேர்வு ஒன்றை அறிவித்தது. அக்., 14ம் தேதி நடந்த மறு தேர்வில், 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதி மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவீதம்(150க்கு 90 மதிப்பெண்) மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு வரை, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெற்று வந்தது.இதனால், ஆசிரியர் பயிற்சி முடித்த பலரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  ஆனால், தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி வ
தமிழகத்தில் 54 புதிய துவக்கப்பள்ளிகள்: முதல்வர்  தமிழகத்தில், இந்த 2013-14ம் கல்வியாண்டு முதல், புதிதாக, 54 துவக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.  விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இந்த அறிவிப்பில் அவர்மேலும் கூறியதாவது:தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை. பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் எந்த வழியில் பி.எட். படித்தாரர்கள் என்பது சான்றிதழில் குறிப்பிடப்படாததால் தகுதியான நபர்களை தேர்வு செய்யமுடியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் திணறுகிறது. 20 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசின் வேலைவாய்ப்பில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பிட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை தமிழ்வழியில் படித்து முடித்தவர்கள் தமிழ்வழி ஒதுக்கீட்டு சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.  உதாரணத்திற்கு எழுத்தர் பதவி என்றால் 10–ம் வகுப்பை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோல், பட்டப் படிப்பு கல்வித்தகுதி கொண்ட பதவிகளுக்கு குறிப்பிட்ட பட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தால் சலுகை கிடைக்கும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 படிப்புகளை எந்த வழியில் படித்தார்?என்பது பார்க்கப்படாது.  இதன்படி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறிப்பிட்ட பட்டப்
அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்   நெல்லை: வரும் கல்வி ஆண்டில் (2013-14) இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.  வகுப்புகளில் குறைந்தது 20 மாணவர்கள்ஆங்கில வழியில் கற்க சேர்ந்தால் அந்த பள்ளிகளில் இந்த ஆண்டே ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோராயமாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட பள்ளிகள் விவரம் குறித்த பட்டியல்களை தயாரித்து அங்கெல்லாம் இந்த ஆண்டே ஆங்கில வழிக் கல்வி தொடங்க அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பள்ளிகள் மட்டுமின்றி கூடுதலாக பல பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவில் சேரும் ஒன்றாம் வகுப்புமாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்கள் குறித்த பணிகளை தொடக்க கல்வித்துறை விரைவில் ஒழுங்குபடுத்திசெயல்படுத்த உள்ளது.