Posts

Showing posts from January 8, 2022
  கவுன்சிலிங் முடியும் வரை நிர்வாக மாறுதல் நிறுத்தம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.  இதையடுத்து, ஒவ்வொரு பதவி நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உத்தரவுகள், ஆன்லைன் வழியில் இறுதி செய்யப்பட உள்ளன. விருப்பமான இடங்களை ஆசிரியர்களே தேர்வு செய்யும் வகையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்நிலையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளதால், ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுத
  இந்த துறை வேலைகளுக்கும் TNPSC மூலம் தான் பணி நியமனம்! சட்ட மசோதா நி றைவேற்றம்!! தமிழக சட்டப்பேரவையில் நீதி மற்றும் மனித வேளாண்மை மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார் அதில் தெரிவித்ததாவது, அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகாரிகள் அதிகார அமைப்புகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆள்சேர்ப்பு நடைபெறும். இதில் போக்குவரத்து துறை மின்சாரத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம், ஆவின் துறைகள் உள்ளிட்ட துறைகளில் தனியாக தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் பணிகள் நிரப்பப்படும் என அதில் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுபோன்ற ஆட் சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகார அமைப்புகளில் ஏற்படும் காலியிடங்களில் ஆள்சேர்ப்பு முக்கியத்துவத
  தமிழகத்தில் மீண்டும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!  தமிழகத்தில் 1 முதல் 9 வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நேரடி வகுப்புகளை துவங்க வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பேரலை தொற்றுக்கு மத்தியில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலங்களில் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. தவிர பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி