29 April 2017

''லஞ்சத்திற்கான நுழைவு வாயில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு!' கொதிக்கும் கல்வியாளர்கள்



ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்தத் தேர்வால் எந்தப் பயனும் இல்லை என்றும், குளறுபடியும், லஞ்சமும் தலைவரித்தாடும் சூழல் உருவாகும் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.அவ்வாறு வெற்றி பெற்றால்தான் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற விதிமுறை உள்ளது. தகுதித் தேர்வை எழுதி வெற்றி பெறுவதற்கானக் காலக் கெடுவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்துள்ளது.

லஞ்சம் பெறவே இந்த தேர்வு..
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வை தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் எழுதுகின்றனர்.தாள் ஒன்றை இடைநிலை ஆசிரியர்களும், தாள் இரண்டை பட்டதாரி ஆசிரியர்களும் எழுதுகின்றனர். தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு கேள்விகளும்,சந்தேகங்களும் எழுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலத்தலைவர் மோசசிடம் பேசிபோது,"இது போன்ற அப்பத்தமான தேர்வு என்று வேறு எதுவும் இருக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தேர்வை ஆதாரப்பூர்வமாக எதிர்த்து வருகிறோம். வட மாநிலங்களில் பி.எட் படிப்பு இல்லை என்பதால் இந்தத் தேர்வை மத்தியக் கல்வி வாரியம் பிரின்ஸ் கஜேந்திரபாபு கொண்டுவந்தது.அவர்களுக்கு இந்தத் தேர்வு தேவையாக இருக்கலாம். 

ஆனால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லாத ஒன்று. இத்தேர்வில் இருந்து மாநிலக் கல்வி வாரியங்களுக்கு விலக்கு தேவை என்றால் அதனை அந்தந்த மாநில அரசு நடைமுறை படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது பிடிவாதமாக தமிழக அரசு இந்தத் தேர்வை நடத்துவது லஞ்சம் பெறுவதற்கு மட்டுமே வழிவகை செய்யும். கடந்த முறை தேர்ச்சி பெற்றவர்களே ஆயிரக்கணக்கானோர் பணியில் சேராமல் காதித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் எதற்காகமீண்டும் தேர்வு" என்றார்.

தேர்வு தகுதி படைத்துவிடாது ....!
இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில்,"இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் கபிலன் ஆசிரியராகப் பணியாற்ற தகுதி இருக்கிறது என்றால் பி.எட் படிப்பும்,ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் எதற்கு? நேரடியாக அப்படியே தகுதித் தேர்வை வைத்துக் கொள்ளலாமே? வெறும் நினைவாற்றலைச் சோதிப்பதற்கான தேர்வாகத்தான் அரசு இதனை நடத்துகிறது. மார்ச் மாதம் முழுவதும் மாணவர்களைத் தேர்வில் பங்கேற்க தயார்ப்படுத்துவதற்கான வேலைகளில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.அப்படி இருக்கும் போது இந்தத் தேர்வுக்கு அவர்களால் எப்படித் தயாராக முடியும்? இந்தத் தேர்வை வைத்து ஆசிரியராக இருக்க இவர் தகுதியானவர் என்று நாம் முடிவுக்கு வந்த விட முடியாது.கல்வியலில் பட்டயமும்,பட்டமும் பெற்ற பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றை நடத்துவது அவசியமில்லாதது" என்றார் .

இது தொடர்பாக இந்தத்தேர்வை எழுதி தோல்வி அடைந்து தற்போது ஆசிரியராகப் பணியாற்றி வரும் கபிலனிடம் பேசிய போது,"தகுதித் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது.இந்தத் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.இதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தும் குளறுபடியாகத்தான் இருந்துள்ளது. தேர்வு முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.அதனால் திறமையுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் ..

குளறுபடித் தேர்வு என்று தான் சொல்ல வேண்டும் ...
10,12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் வாங்கிய மதிப்பெண்களை " வெயிட்டேஜ் மதிப்பெண்கள்" என ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பிடுகின்றனர்.இதனால் ஒரு மாணவனுடைய திறன் என்பது மாறுபடுகிறது.இப்போது சிறப்பாக தேர்வு எழுதியவர்கள் கடந்த கால பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள்.இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.தேர்வுக்காக நன்றாகப் படித்தும் அந்த மாணவனால் தேர்ச்சி பெற முடியாதநிலை உள்ளது. தகுதித் தேர்வு என்பதைவிட இதனைக் குளறுபடித் தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

ஆசிரியருக்குத் தகுதித்தேர்வு என்றால், இத்தனை நாட்கள் அவர் தகுதியுடன் இல்லையா ?என்ற கேள்வியை எழுப்புகிறது.அதுமட்டுமன்றி தேர்வு எழுதாமல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஆசிரியர்களிடம் பயின்ற மாணவர்களும் பரிசோதனைக்குரியவர்களா என்ற கேள்வியும் இங்கே எழுப்புகிறது ..!
TRB மூலம் 6,390 பேருக்கு வேலை


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர்,செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு, 'டெட்' தேர்வு போக, ஆறு போட்டி தேர்வுகள் நடக்க உள்ளன. அதன் விபரம்


TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.


பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம்ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதேஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளிஅதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்தபதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டுஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்புமையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளிநிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர்கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றேஅவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.


ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்விஅதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்துவிட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணிநியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்குஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


தகுதி தேர்வு
இந்தஉத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்விஇயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர்மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசுகடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம்நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத்தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்றுகூறியிருந்தார்.


நாடவில்லை
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வுமூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம்ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்பஅரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளிநிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததைஎதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர்தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்தஐகோர்ட்டை நாடவில்லை.


நிரப்பலாம்
அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசுஉத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான்ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண்ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர்தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசுபணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவேஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்குதொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின்உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதிசெய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு.
இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் 
வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் 2,119 முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம்
 டி.ஆர்.பி நிரப்ப உள்ளது.அதேநேரத்தில் கூடுதலாக 1600 முதுநிலை ஆசிரியர்களும்,748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது
TNPSC :குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை

குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிக்கையில், "தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில்வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953
தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப்பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர்மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 

காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி –
(i)உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii)நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.05.2017

தேர்வு நாள் – 06.08.2017

தேர்வு மையங்களின் எண்ணிக்கை – 116
விண்ணப்பிக்கும் முறை – www.tnpsc.gov.inwww.tnpscexams.net,www.tnpscexams.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இத்தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுதுவிண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாததொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...