Posts

Showing posts from December 9, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(Forest Apprentice) தொகுதி -VI பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(Forest Apprentice) தொகுதி-VI பதவி நியமனத்திற்காக நாளை(10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல்(Mandous Cyclone) காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.