Posts

Showing posts from April 7, 2015
மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்தில் பதில் தர தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கணினி ஆசிரியர்கள் 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை திண்டுக்கல்: 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது. ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிட