Posts

Showing posts from March 29, 2022
Image
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யு.ஜி.சி வெளியிட்ட அறிவிப்பு..!!!! சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது யு.ஜி.சியின் அங்கீகாரம் பெறாமல் கல்வி நிறுவனங்கள் எந்த ஒரு படிப்பையும் நடத்த அனுமதி கிடையாது. கடந்த 2014 முதல் 2015-ம் ஆண்டு வரை மட்டுமே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்விக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும் அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் செல்லாது. இதனால் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது‌. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழு பொறுப்பு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமே என்றும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..! இனி இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்..! முக்கிய அறிவிப்பு..! டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடும் தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை பிடிஎஃப் (Pdf) வடிவில் பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் சான்றுகளின் அடிப்படையில் தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்க்கப்படும். ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ, தேவையான ஆதார ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை குறித்த விவரங்களை முழுமையாக காண https://www.tnps
Image
  Group 4 Exam Pattern: 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்; குறைந்தபட்சம் 90 மார்க்.. குரூப் 4 தேர்வு முறை எப்படி? மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களி
Image
  ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு குறித்து, சென்னையில் இன்ற செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 7,382 பணியிடங்களில், 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினர் மூலம் நிரப்பப்படும். குரூப் 4 தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வின் ம
Image
 TNPSC குரூப்4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் நாளை(30-03-2022) முதல் ஏப்ரல் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் அறிவிப்பு
Image
  700 மாணவர்களுக்கு பாடம் நடத்தும் 7 ஆசிரியர்கள்: பற்றாக்குறையால் திணறும் சேலம் அரசு பள்ளி : சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், 700 மாணவ, மாணவியர் உள்ள நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையால் பெற்றோர் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.சேலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பங்களிப்போடு, கணினி வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி, புதிய சீருடை, கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால், இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகரித்துள்ளனர். மாநிலத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட துவக்கப்பள்ளிகளில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. பல கிலோ மீட்டர் சுற்றளவிலிருந்து வாகனங்களில் வந்து செல்லும் அளவுக்கு இப்பள்ளி பிரபலமடைந்துள்ளது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காததால், கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல வகுப்புகளை ஒரே ஆசிரியர் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மக்களின் நம்பி
Image
  மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் தற்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்
Image
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என TNPSC தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 வருடமாக கொரோனா பரவலால் தடைபட்டு இருந்த தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குரூப் 4 தேர்வு எப்போது? என்பதற்கான அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகும் என தெரிவித்துள்ளார். இன்று மாலை தேர்வு அறிவிப்பின் போது, அனைத்து விபரமும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image
  TNPSC: டின்பிஎஸ்சி Group 4 பிரிவில் என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன? ஊதியம் எவ்வளவு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. என்னென்ன பணியிடங்கள் குரூப் 4 பதவியின் கீழ் வருகின்றன என்பதை காண்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் மோகம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 5,831 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் நடைபெறவுள்ளது. இதற்கு டிகிரி படிப்பு முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இதற்கான தகுதி 10ம் வகுப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு தொடர்பான காலி பணியிடங்கள், தேர்வு தேதி ஆகியவை நாளை அறிவிக்கப்படவுள்ளது. குரூப் 4 பணியிடங்கள்: முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கும் வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் ப
Image
  தமிழகத்தில் TET தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு?.. புதிய கோரிக்கை..!!!! தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருவாரூர் உட்பட அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதேப்போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு பாரபட்சம் இன்றி TET தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் முறையான தகுதியுடன் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. RTE விதிப்படி அரசாணை 181 தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டங்கள் குறித்து அரசு அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்களுக்கும்
Image
  TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு.! 'குரூப் 4' தேர்வு எப்போது தெரியுமா..? இன்று வெளியாகிறது அறிவிப்பு..!! இன்று வெளியாகிறது குரூப் 4 அறிவிப்பு : தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வருடம் வெளியான வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி இருக்கிறது. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் மோகம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 5,831 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் நடைபெறவுள்ளது. போட்டி தேர்வர்கள் மகிழ்ச்சி : இதற்கு டிகிரி படிப்பு முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இதற்கான தகுதி 10ம் வகுப்பு