30 December 2013

Flash news: MADRAS HIGH COURT ORDERD TO PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 ) FOR B SERIES TRB PG TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு நாளை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது thanks to www.thamaraithamil.blogspot.com
முதுநிலை தமிழாசிரியர் சான்று சரிபார்ப்பு இன்று தொடக்கம் 

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்று சரிபார்ப்பு இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் சான்று சரிபார்ப்பு நடக்கிறது. 

 அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடந்தது. தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்கள் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 11ம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 இதையடுத்து ஒரு பதவிக்கு ஒருவர் வீதம் சான்று சரிபார்ப்பு நடத்துவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அழைப்பு கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு எண்ணை பதிவு செய்து இணைய தளத்தில் இருந்து அழைப்புக் கடிதங்கள் மற்றும் கவுன்சலிங்கில் பங்கேற்கும் போது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் சான்று சரிபார்ப்பின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு இறுதி தெரிவு பட்டியல் வெளியிடப்படும். முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான தேர்வை 32,000 பேர் எழுதினர். 

தற்போது மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 602 இடங்களில் மேற்கண்ட தமிழாசிரியர்களை நியமிக்க 649 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிஆர்பி நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான சான்று சரிபார்ப்பு பெரும்பாலும் சென்னையில்தான் நடப்பது வழக்கம். ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இப்போது சான்று சரிபார்ப்பு நடக்கிறது.
77 காலி பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 26–ந் தேதி குரூப்–1 தேர்வு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

 துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஆன்லைனில் மட்டுமே... தமிழ்நாட்டில் காலியாக உள்ள 
துணை கலெக்டர் பதவி(3 இடம்), 
துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி(33), 
உதவி கமிஷனர் பதவி(33), 
கிராமப்புற வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதவி(10) உள்பட 4 உயர் பதவிகளுக்கான 77 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்து உள்ளது. 

 இதற்கான முதல் நிலை தேர்வை 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.netஎன்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் ஜனவரி–28 குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.  இதே போன்று சட்டம் பயின்றவர்களுக்கு 1 ஆண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28–ந் தேதி கடைசி நாள் ஆகும். 20 சதவீதம் முன்னுரிமை தமிழக அரசு ஆணையின்படி, இந்த தேர்வில், தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குரூப்–1 முதல்நிலை தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது. 

இதில் 150 பொது அறிவு வினாக்கள், 50 திறனாய்வு வினாக்கள் என மொத்தம் 200 கொள்குறி(Objective) வகை வினாக்கள் கேட்கப்படும். 33 மையங்கள் குரூப்–1 முதல்நிலை தேர்வானது, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சிதம்பரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாகர்கோவில், நாகப்பட்டினம், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது. 

தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ–மெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...