16 February 2022

 10, 12ஆம் வகுப்பு வினாத்தாள் நடைமுறையில் மாற்றம்; தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்


10, 12ஆம் வகுப்பு திருப்புதல்தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியானநிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி , வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது .


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது . பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதே போன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத் தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன .


இந்நிலையில் , 10 ஆம் வகுப்பு மாண வர்களுக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடதேர்வுகள் 14.2.2022 அன்று நடை பெற்றன . ஆனால் , இந்த பாடங்களுக் கான வினாத்தாள் 13.2.2022 அன்று காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியானது . இந்த சம்பவம் தொடர் பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் பொன் . குமார் , திருவண்ணாமலையில் விசாரணை நடத்தினார் .


அதேபோல் , 14.2.2022 அன்று பிற்பகல் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக் கான வணிக வியல் தேர்வு வினாத்தாளும் ஞாயிற்றுக் கிழமை இரவு வெளியாகி யுள்ளது . சென்னை மாவட்டத்தில் இருந்துதான் இந்த வினாத்தாள் வெளி யாகியிருப்பது தெரிய வந்தது .


சென்னையில் 8 பள்ளிகளுக்கு நேற்றுகாலை 8 மணிக்கு அனுப்பப்பட்ட 10 ஆம்வகுப்பு வினாத்தாளுடன் பிளஸ் 2 வணிகவியல் வினாத்தாளும் சேர்த்து வழங்கப்பட்டிருப்பதும் , அந்த பள்ளி களில் இருந்துதான் வினாத்தாள் வெளியாகியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந் துள்ளது .


இதுகுறித்து விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் , '' திருப்புதல் தேர்வை பொறுத்தவரையில் இனிமேல் பள்ளி களுக்கு வினாத்தாள் முன் கூட்டியே அனுப்பப்படாது . தேர்வு தொடங்கு வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்பப்படும் '' என்று தெரிவித் தார் .


2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை


பள்ளிக்கல்வி ஆணையர் கே . நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் , '' திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள் , தேர்வு நடைபெறும் முன்பு சமூக வலைதளங்களில் வெளி வந்ததன் அடிப்படையில் துறை ரீதி யாக விரிவான கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது .


அந்த ஆய்வில் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பள்ளிகளில்இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப் பட்டுள்ளது . இதற்கு காரணமான பள்ளிகளின் நபர்கள் மீது குற்ற வியல்நடவடிக்கை எடுக்கப்படும் . தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல் களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் '' என்று தெரிவிக்கப் பட் டுள்ளது .

 TN TRB முதுகலை ஆசிரியர்  தேர்வர்களுக்கு அதிர்ச்சி!.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!





தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) 6 தேர்வுகளை நடத்தி அதன் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.


அந்த வகையில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியானது.


இந்த தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பி.எட், எம்.எட் படித்த பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை உயிர் வேதியியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், நேற்று மதியம் உடற்கல்வி, விலங்கியல் பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது.


இந்த தேர்வு நேற்று நாமக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த 4 மையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் நடைபெற்றது. ஆனால் பலரும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததால் 7.30 மணிக்குள் தேர்வு எழுத செல்ல முடியவில்லை.


அதன்பிறகு சென்றதால் ஊழியர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கவில்லை. மேலும் தேர்வு மைய வளாகத்தில் 8 மணிக்கு பிறகு முன்பக்க கேட் மூடப்பட்டது. இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பழைய நடைமுறையை போலவே தங்களுடைய சொந்த மாவட்டங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 75 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்





தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.


மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (சென்னை மற்றும் மதுரை)இயங்கி வருகின்றன. இவற்றில்பதிவு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடைமுறையில் இருக்கும்.


அப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,159 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,56,087 பேரும், பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 228 பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17.81 லட்சம் பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16.14 லட்சம் பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 28,60,359 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 13,20,337 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386 பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1.38 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

 TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. தேர்வாணைய தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்...!!!!





தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை.


தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அந்த அட்டவணையில் நடப்பு ஆண்டில் 32 வகை போட்டித் தேர்வுகளானது நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதையடுத்து பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இனிவரும் போட்டித் தேர்வுகள் காலை 9:30 மணிக்கு தொடங்கபடும். தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு தொகுத்தேர்வாக அமையும். இதில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி நிரந்தர கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் ஆகிய பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் 2022 பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதனை தொடர்ந்து குரூப் 2, 4 தேர்வு தொடர்பாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான தேதி மார்ச் மாதமும் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும். காலை தேர்வு 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறும். பிற்பகல் தேர்வு 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...