26 September 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு

 மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘தமிழக அரசு 30.5. 2014ல் ஓர் அரசாணை வெளியிட்டது. 

அதில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பிஎட் மற்றும் டிஇடி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணிற்குகருணை (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்குவதாகவும்,இந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறப்பட்டது. 

20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறைக்கும், தற்போதைய கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதேபோல் மதிப்பெண் கணக்கிடுவதிலும்வேறுபாடு உள்ளது. தற்போது சுலபமான பாடமுறை பின்பற்றப்படுவதால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. 

ஆனால் முன்பு கடினமான பாடத்திட்டத்தால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை.அந்த உத்தரவில் பதிவுமூப்பு மற்றும் அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட வில்லை. இந்த அரசாணையில் எங்களுக்குரிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டிஇடி தேர்வின் அடிப்படையில் சமமான அளவீட்டு முறையை பின்பற்ற வேண்டும். எங்களை தகுதி பெற்றவர்களாக அறிவித்து, வேலை வழங்க உத்தரவிடவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என கூறப்பட் டிருந்தது. 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் பணி நியமனங்களுக்காககவுன்சலிங் நடத்தினாலும், பணி நியமனங்கள் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர். இந்நிலையில், பிரதான மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. 

அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களுக்காக 80 இடங்களை காலி வைத்திருக்கிறோம்’ என்றார். 

இதையடுத்து நீதிபதி, “மனுதாரர்களின் நலன் காக்கப்பட வேண்டும். நியமனங்களுக்கு இடையூறாக நீதிமன்றம் இருப்பதை விரும்பவில்லை. எனவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களில் 80 பணியிடங் களை டிஆர்பி காலியாக வைத்திருக்க வேண்டும்,“ எனக் கூறி மனு மீதான விசாரணையை அக். 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்? 

 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. 

அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களைநீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்

  இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை என கேள்வி கேட்பார்கள். 

மேலும் தற்போது பணியில் சேர்நதுள்ளவர்களுக்கு தடைவிதிக்கும் படி நீதிமன்றத்தில் தேர்வு பெறதவர்கள் வழக்கு தொடுக்கலாம். இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் 

இது உறுதி ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது.
ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள்-The Hindu

 தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நிய மனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. 

இந்த தகுதித் தேர்வை எதிர்த்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு தளர்வு வழங்க கோரியும் பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகின. இந்நிலையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்குவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். 

இந்த அறிவிப்பால் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது. இதற்கிடையே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆசிரியர் பணி நியமனத் துக்கு இடைக்காலத் தடை விதித்தது. எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எனினும் பணி நியமன நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடும் போக்கு தொடரும் என்றே தெரிகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்கும்போது சில அதிகாரிகளின் தவறான புரிதலால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே அரசுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிய காரணமாக அமைந்துள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள். 

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியை யாரேனும் பெற்றிருந்தால், அந்த கூடுதல் தகுதிக்கு தரப்படும் கூடுதல் மதிப்புதான் வெயிட்டேஜ். பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பட்டப்படிப்பும், பி.எட். தகுதியும் அடிப்படை தகுதி என்றால் அதற்கு மேல் அவர் பெற்றிருக்கும் கல்வித் தகுதிக்குத்தான் வெயிட்டேஜ் தரப்பட வேண்டும். இதுதான் பொதுவாக பணி நியமனங்களில் பின்பற்றப்படும் நடைமுறை. 

இதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ளும் ஆசிரியர் கல்வி வாரியம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் அடிப்படை கல்வித் தகுதிக்கும், அதற்கும் குறைவான பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் தருவது நடைமுறைக்கு முரணானது. இந்த விதிமுறைகள் யாவும் கல்வித் துறையைச் சேர்ந்த நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர, அமைச்சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல. 

தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான காலி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களும் ஏராளமானவை நிரப்பப்படவில்லை. தற்போதைய வெயிட்டேஜ் முறை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முதல் தலைமுறையினர் ஆசிரியர் பணியில் அமர்வதை தடுப்பதாக உள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெரும் பிரச்சினைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். 

அதேபோல் இப்போதைய வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரத்திலும் முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பித்தால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தகுதியுள்ள பலர் ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். 

கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றுள்ளவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, வயது மற்றும் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் தருவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். புதிய திருப்பம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பு ஆசிரியர் நியமன விவகாரத்தில் இன்னொரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்

பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டபட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது. அவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய தடையில்லை என அறிவித்தது. 

இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தடையை புதன்கிழமை நீக்கியது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்ற இடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களுக்கான பணி நியமன உத்தரவைப் பெற்றுச் சென்றனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணியிடங்களில் வெள்ளிக்கிழமையன்றே சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...