19 May 2022

 பொது தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு!



பொது தேர்வுகளில் பங்கேற்காத, 1.17 லட்சம் மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து, 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.இவ்வளவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு விரிவான அறிக்கை தர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்த தேர்வர்கள் அனைவரையும், ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தேவை?



India post recruitment 2022 for 38926 GDS posts cut off mark details: போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு.



இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும்


கிராம தபால் சேவை


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926


தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310


கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) - ரூ.12,000


உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) - ரூ.10,000


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022


விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்பதால், நீங்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். கடந்த முறை பெரும்பாலும் 97 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. குறைந்தப்பட்சமாக 87 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதன்மூலம், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது தெரிகிறது. அதேநேரம் 90 சராசரி மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற நிறைய பேருக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


இதில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் 85 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே 430 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ள மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 90 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த முறை வேலை கிடைத்துள்ளது. அதேநேரம் மற்ற பிரிவினருக்கு 90 சராசரி மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.


மேலும் கடந்த முறை மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் முன்னுரிமைகளை அளிக்க என்ற நிலையில், தற்போது ஒரே மாவட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்களுக்குள் மட்டுமே உங்களுக்கு போட்டி.


ஏனெனில், இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை சம்பந்தப்பட்ட கிராம தபால் நிலையங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கே வேலை கிடைக்கும். அதாவது நாம் விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையம், கிராம தபால் நிலையம் என்ற வரிசையில் தேர்வு செய்து விண்ணப்பிப்போம். ஒருவருக்கு 5க்கு மேற்பட்ட விருப்பங்கள் வழங்கப்படும். நீங்கள் விண்ணப்பித்த கிராம தபால் நிலைய பதவிக்கு, உங்களை விட பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்கும்.


இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, மாநிலம் அல்லது இந்தியா முழுமைக்கான தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பப்படுவது கிடையாது. குறிப்பிட்ட கிராம தபால் நிலையத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும். இருப்பினும் நீங்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு வேலை கிடைக்கும். எனவே பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அப்ளை பண்ணுங்கள்.

 TNPSC 2022 குரூப் 4 தேர்வுகளே.. இலவச பயிற்சி வகுப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!




தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.


தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


மேலும் குரூப்-4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இந்த தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி ஒரு லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவக்கூடிய வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


வருகின்ற 24 ஆம் தேதி இந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை பெற 044-24615160 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தேர்வில் ஆள் மாறாட்டம்தடுக்க புதிய நடைமுறை.!!! TNPSC அதிரடி தகவல்.!!!




பணி நியமன தேர்வுகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'டுக்கு பதில், 'பயோமெட்ரிக்' விரல் ரேகை பதிவு முறையை கொண்டு வர, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.


தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இந்த தேர்வை வெளிப்படை தன்மையுடனும், எந்தவித முறைகேடுகளும் இன்றி நடத்த, புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படுகின்றன.இந்த வகையில், வரும் காலத்தில் தேர்வு எழுத வருவோர், ஹால் டிக்கெட்டை அச்செடுத்து வருவதற்கு பதில், தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை அறிமுகம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைகள் முடிந்துள்ளன.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யால் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் நேர்மை தன்மையை தெரிந்து கொள்ள, தேர்வு முடிவுகள் வந்ததும், தேர்வர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை, அந்தந்த துறைகளின் வழியே, முழுமையாக ஆய்வு செய்கிறோம்.போலீஸ் வழியே தேர்வர்களுக்கு குற்றவியல் பின்னணி மற்றும் வழக்கு விபரங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். அதன்பிறகே, பணி நியமனம் வழங்கப்படுகிறது.


எனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்த பணியாளர்களிடம், போலி சான்றிதழ் பிரச்னை எதுவும் எழுந்ததில்லை.எனவே, தேர்வு நடைமுறைகளை எளிமையாக்கவும், பாதுகாப்பான வெளிப்படை தன்மையை கொண்டு வரவும், தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படுகின்றன. இதன்படியே, ஜூனில் நடக்க உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வில், கணினி வழி தேர்வு, பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.


ஆள் மாறாட்ட பிரச்னைகளை அறவே தடுக்கும் வகையிலும், தேர்வர்களின் அடையாளத்தை கணினிவழிப்படுத்தும் வகையிலும், தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுஉள்ளோம்.தேர்வர்கள் ஹால் டிக்கெட் எடுத்து வருவதற்கு பதில், தங்கள் விரல் ரேகையை பதிவு செய்தால், அதில் உள்ள தகவலின்படி, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 


இதற்காக ஆதார் போன்ற ஒருங்கிணைந்த அடையாள அமைப்பின் விபரங்களை பயன்படுத்தலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு; 'ஈஸி' என்பதால், மாணவர்கள் உற்சாகம்..



திருப்பூர் : பத்தாம் வகுப்பு ஆங்கிலமொழி தேர்வு சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், 108 மையங்களில், 29 ஆயிரத்து, 874 மாணவர்கள் பங்கேற்றனர்; 2048 பேர் தேர்வு எழுதவில்லை.


சராசரி மாணவர்களும் மதிப்பெண்களை குவிக்கும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இடம்பெற்றிருந்தன.

 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு



தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 3 ஆயிரம் பேர்களுக்கான ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?




TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது?



தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம்.


அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் இரண்டு பகுதிகளாக இருக்கும். முதல் பகுதி நாம் விடையளிக்க கூடிய பகுதி. இரண்டாம் பகுதி நம்முடைய சுய விவரங்களை நிரப்ப வேண்டிய பகுதி. இவை ஓ.எம்.ஆர் ஷீட்டின் முதல் பகுதியில் இருக்கும். இரண்டாம் பகுதியில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்தில் உங்களின் கையொப்பம் இட வேண்டும். இதனை தேர்வு துவங்கும் முன் தேர்வறையில் இட வேண்டும்.


ஓ.எம்.ஆர் ஷீட்டில் தேர்வரின் பெயர், பதிவெண், பாடம், தேர்வு மையம், தேதி உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். அவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


அடுத்ததாக கொஸ்டின் புக்லெட் நம்பரை (வினாத்தாள் தொகுப்பு எண்) எழுதி, அதற்குரிய இடங்களில் ஷேடு செய்ய வேண்டும்.


பின்னர் தேர்வு தொடங்கிய பின்னர், ஒவ்வொரு வினாவையும் ஒருமுறைக்கு இருமுறை படித்து, சரியான விடையை தேர்ந்தெடுத்த பின், அந்த வினாவிற்குரிய சரியான ஆப்சனில் கவனமாக ஷேடு செய்ய வேண்டும்.


200 கேள்விகளுக்கும் கண்டிப்பாக ஷேடு செய்ய வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு ஆப்சன் 'E' என்பதை ஷேடு செய்ய வேண்டும். ஏதாவது கேள்விக்கு ஷேடு செய்யாமல் விட்டால் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.


அடுத்ததாக, தேர்வு முடிந்த பின்னர் ஓவ்வொரு ஆப்சனிலும் எத்தனை கேள்விகளுக்கு பதிலளித்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டு ஷேடு செய்ய வேண்டும். பின்னர் இடது கை பெருவிரல் ரேகை, மற்றும் கையொப்பம் விட வேண்டும். முக்கியமாக, ஓ.எம்.ஆர் ஷீட்டில் குறிப்புகளோ, கிறுக்கல்களோ இருக்க கூடாது.


அடுத்ததாக கேள்விகளுக்கு விடையளிக்கும்போது, கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பதிலளியுங்கள். தெரியாத கேள்விக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், அந்த கேள்வியை விட்டு விட்டு, அடுத்த கேள்விக்கு விடையளியுங்கள். 200 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்றாற் போல் விரைவாகவும், அதேநேரம் கவனமுடனும் செயல்படுங்கள்.

 ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் - அமைச்சரிடம் கோரிக்கை



ஜூன் மாதமே பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்த குமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்,


'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள்.


மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும்.


ஏற்கனவே 800 நாட்கள் கரோனா நோய் தொற்று காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு படிப்பை மறந்து கல்வி பாழகிப் போனதால் மீண்டும் அந்த தவறை நாம் செய்யக்கூடாது. அரசு அறிவித்தபடி காலதாமதமின்றி உடனடியாக வரும் கல்வியாண்டு தொடங்கிட வேண்டும். சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது.


ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதை மறந்து விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே மாணவர்கள் அடிப்படை கல்வியை மறந்துவிட்டார்கள். எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல்

இந்த கல்வியாண்டில் மகிழ்ச்சிகரமாக இந்த ஆண்டே இந்த மாதமே தொடங்கிட வேண்டும்.


பள்ளிகள் திறப்பதை காலதாமதம் செய்ய செய்ய பெற்றோர்களின் கடன் சுமை அதிகரிக்கும் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் மாணவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது, கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். படிக்கிற சூழல் இல்லாமல் போகும் படிப்பதை மறப்பார்கள், ஏழ்மை உள்ள பெற்றோர்கள் கூலி வேலைக்கு பிள்ளைகள் அனுப்புவார்கள், விடுமுறை தொடர கூலி தொழிலாளர்கள் அதிகரிக்கும் சமுதாய சீர்கேடுகள் மிதமிஞ்சி போகும்.


பெற்றோர்களின் மன உளைச்சலை குறைக்க உடனடியாக பள்ளிகள் திறந்து பிள்ளைகளை பள்ளிக்கு வருவதை உறுதி செய்து பெற்றோர்கள் கணவை இந்த ஆண்டாவது நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். ஜூன் மாதம் முதல் வாரமே பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் இன்ன பிறவற்றை வழங்கி அடிப்படை கல்வியை சொல்லித்தந்து படிப்பதை உறுதி செய்திட ஆர்வத்தைத் தூண்டுவதற்கு ஒரு மாதம் முழுக்க சரியாக போய்விடும். எனவே ஜூன் மாதமே உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...