Posts

Showing posts from March 26, 2023
Image
  டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியிடப்படும் - அண்ணா பல்கலை. தகவல் முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல, எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க்ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடப்பாண்டு முதல் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு. மாணவர் சேர்க்கை (சீட்டா) என்று பெயரிடப்பட்டுள்ளது.  அதன்படி, 2023-ம் ஆண்டு டான்செட், சீட்டா தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த பிப்ரவரியில் வெளியானது. இதையடுத்து டான்செட் தேர்வு தமிழகம் முழுவதும் 40 தேர்வு மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து சீட்டா தேர்வு இன்று (மார்ச் 26) நடைபெறுகிறது. இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை பல்கலை.யின் டான்செட் பிரிவ
Image
  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும். மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திர
Image
  ஒரே மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதிய 700 பேர் பாஸ்.. எப்படி சாத்தியம்? சந்தேகத்தை கிளப்பிய ராமதாஸ்!! டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு தேர்வு மையத்தில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரை
Image
  TNPSC - தேர்வில் ஒரே மையத்தில் 700 பேர் பாஸ் - விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு   1,338 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. 29,882 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. கவுன்சிலிங் முடிந்து இறுதி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோர் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி பெற்ற பதிவெண்கள் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்தவை. வரிசையாக ஒருவருக்கு பின் ஒருவர் தேர்வாகி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலானவர்கள் அங்குள்ள பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர்.
Image
  TNPSC GROUP-4: குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை, தாமதத்திற்கான காரணத்தை விளக்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாக தாமதமானது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. தாமதம் ஏன்? இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ”குரூப் - 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. குரூப் -4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடியாக சரிபார்ப்பு நடக்கிறது.  எந்தவித தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். குரூப் - 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் ஆன பிறகு முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.  குரூப் - 4 தேர்வு: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்த