Posts

Showing posts from July 18, 2022
Image
  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழநாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான உடன், கல்லூரிகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது. ஆனால்,. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளையுடன் (19ந்தேதி)நிறைவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,76,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்
Image
  தமிழ் மொழி கட்டாயமில்லை என்பதால் சான்றிதழ் சரிப்பார்ப்பில் குவிந்த வெளிமாநிலத்தவர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16,17,18 ஆகியத் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்பர் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்,பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பாலிட
Image
  நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி மதுரை: ஆசிரியர் பணி நியமனம் அவசரம் என்றால் முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்திருக்கிறது. நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்யகோரிய வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.