Posts

Showing posts from November 30, 2022
Image
  விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி செய்திக்குறிப்பு;கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையானகூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 244 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு வரும் டிச., 12 முதல் 23ம் தேதி வரை விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் வடக்குச்சிப்பாளையம் ஏ.ஆர்., பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது.நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டு நேற்று 28ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbvpm.in/hallticket.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை 04146 -229854 மற்றும் drpdsvpm@gmail.
Image
  கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி - உயர்கல்வித்துறை 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Image
  சிறை அலுவலர் பணிக்கு 24 தேர்வு மையங்களில் டிச.26ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2022-ம் நாளிட்ட அறிவிக்கை எண். 25/2022-இல், 22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூ