28 October 2022

 குரூப் 2, 2A தேர்வு முடிவு.. TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!!





தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன.



அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் இடையில் இந்த வருடம் தாமதமாகி கொண்டிருக்கிறது.அதனால் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.மகளிர் காண இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ள நிலையில் அதனை செயல்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இது பற்றி வரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை மட்டும் அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


 ஏமாற வேண்டாம்.. ஆன்லைன் வழியாக பிஎச்டி படித்தால் செல்லாது.. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மாணியக்குழு அறிவித்துள்ளது.


அதேபோல உயர்கல்வி நிறுவனங்கள் பிஎச்டி பட்டங்களை வழங்குவதற்கு யுஜிசி விதிமுறைகளையும் அதன் திருத்தங்களையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


ஆன்லைன் வழியாக கல்வி பரவலாகி வரும் நிலையில், யுஜிசி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆன்லைன் கல்வி

 

கல்வி அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழிக் கல்விக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அதற்கேற்றார் போல அதிக தொகையும் வசூலிக்கப்பட்டது. பட்டப்படிப்பு, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு என எல்லாவற்றையும் ஆன்லைன் வழியிலேயே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து பிஎச்டி படிப்பையும் இவ்வாறே தொடர முடியும் என சில கல்வி நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்திருந்தன.


விளம்பரங்கள்

 


அதற்காக மாணவர்களிடமிருந்து பெரும் தொகையும் வசூலிக்கப்பட்டது. இது குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்தன. இந்நிலையில் தற்போது யுஜிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிஎச்டி பட்டங்களை வழங்குவதற்கு யுஜிசி விதிமுறைகளையும் அதன் திருத்தங்களையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


திருத்தங்கள்

 


இது குறித்து 'எம்ஃபில், பிஎச்டி பட்டங்கள் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறையை' திருத்தி வெளியிட்டுள்ள யுஜிசி, பிஎச்டி படிப்புகளுக்கான சேர்க்கையில் மொத்த இடங்களில் 60 சதவிகிதத்தை UGC-NET அல்லது JRF தேர்வுகள் மூலம் நிரப்பப்பட வேண்டும். மீதமுள்ள 40 சதவிகித இடங்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே உயர்கல்வியில் சில திருத்தங்களை மேற்கொண்ட யுஜிசி ஒரே நேரத்தில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்களை பெற முடியும் என்று கூறியிருந்தது.


அறிவிப்பு

 


ஆனால் இது இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்(certificate courses) ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை அடிப்படையாக கொண்டு சில தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் வழி பிஎச்டி (PhD)க்கு அட்மிஷன் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இச்சூழலில் தற்போது யுஜிசி மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


PhD படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் 'யுஜிசி ஒழுங்குமுறை விதிகள் 2016 இன் படி' PhD திட்டங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் நம்பகத் தன்மையை சரி பார்க்க வேண்டும் என்றும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


 ரேஷன் கடை வேலை பட்டதாரிகள் விண்ணப்பம்



ரேஷன் கடை வேலைக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, குறைந்தபட்ச கல்வித் தகுதியே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஜினியரிங், முதுகலை பட்ட தாரிகள் என, பலரும் ஆர்வ முடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 முதல் 350 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


கல்வித் தகுதியாக விற்பனையாளர் பதவிக்கு பிளஸ் 2; எடையாளர் பதவிக்கு ௧௦ம் வகுப்பு தேர்ச்சியும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


நேர்காணல் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.


விண்ணப்பிக்க கடைசி நாளாக, நவம்பர் இரண்டாவது வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இன்ஜினியரிங் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என, அதிகம் படித்த பலரும் விண்ணப்பித்துள்ளனர்.


இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடை வேலைக்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு, பொது வினியோக திட்டம் தொடர்பான பாடங்களை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்' என்றார்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...