30 April 2022

 TANCET தேர்வு - நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!



நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.


2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை https:/tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


அந்தவகையில், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு TANCET எழுத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் BE / B.Tech முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில், TANCET தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். TANCET தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



 அரியர் மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! இதுதான் இறுதி வாய்ப்பும்..! உடனே இதை செய்யுங்க..!




சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியா் தோவுகளை முடிக்காத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சோந்த மாணவா்களுக்கு நடப்பாண்டு நடைபெறும் தோவுகளில் அனுமதி அளிக்கப்படும். இது, அவா்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதேபோன்று, 2015-2016 முதல் 2018-2019ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் சோந்த முதுநிலை மாணவா்களுக்கு, 2022 ஏப்ரல் மாத பருவத் தோவே இறுதி வாய்ப்பாக இருக்கும்.


இது குறித்த கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியா் தோவெழுத தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பலரும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 TNPSC English 2: பொது ஆங்கிலப் பிரிவில் தேர்வுக்கு தயாராகுவது எப்படி?



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2ஏ தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில், பொது ஆங்கிலம்( அல்லது தமிழ்) மற்றும் பொதுப் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.


பொது ஆங்கிலத்தில் இருந்து மட்டும் 100 கேள்விகள் இடம்பெறும்.


தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.


From a Railway Carriage -


18, 19ம் நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் இயற்கை விஞ்ஞானிகளின் (Natural Scientist) தொடக்கத்தைக் குறித்தன. விஞ்ஞான ரீதியாக மட்டுமே உலகை அணுக முடியும் என்ற கோட்பாடுகள் உருவாக்கம் பெற்றன. இந்த அறிவியல் புரட்சியின் மணிமகுடமாக தொடர்வண்டி(ரயில்) இருந்தது. புராதான மனிதனின் தொன்மைக் கதைகள், சடங்குகள், வாழ்வியல் முறைகள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதனை கேள்விக்குள்ளாக்கின. சுருங்கச் சொன்னால், பழைய வாழ்க்கைமுறை குறித்த வியப்பு, மலைப்பு குறைந்தது.

 


Robert Louis Stevenson




ரயில் பயணங்கள் சமகால வாழ்வை நோக்கி முன்னோக்கி செல்கின்றன. ரயில் பெட்டிக்குள் இருந்து நாம் பார்க்கும் உலகம் மாறிக் கொண்டே இருக்கும். மாற்றத்தை, முரண்பாட்டை நாம் சகித்து கொள்ளத் தான் வேண்டும். முற்று முடிந்ததாக தோன்றிய உண்மைகள் யாவும், புதுப்புது உண்மைகளை நோக்கித் திறந்து கொள்கிறது என்று ஆசிரியர் தனது அனுபவத்தை விவரிக்கிறார்.


பாடல்:


Faster than fairies, faster than witches,

Bridges and houses, hedges and ditches;

And charging along like troops in a battle,

All through the meadows the horses and cattle:

All of the sights of the hill and the plain

Fly as thick as driving rain;

And ever again, in the wink of an eye,

Painted stations whistle by.


(தோராயமான மொழிபெயர்ப்பு - போர்க்களத்தில் படைகள் முன்னேறுவதை போல் ரயிலின் வேகம் உள்ளது. தொன்மைக் கதைகளில் உள்ள வனத்தேவதைகள், சூனியக்காரிகளை விட அதிவேகமாக நகர்கிறது. கொட்டித் தீர்க்கும் கனமழை போல் இயற்கை காட்சிகள் மாறுகிறது)


Here is a child who clambers and scrambles,

All by himself and gathering brambles;

Here is a tramp who stands and gazes;

And there is the green for stringing the daisies!

Here is a cart run away in the road

Lumping along with man and load;

And here is a mill and there is a river:

Each a glimpse and gone for ever!


(தோராயமான மொழிபெயர்ப்பு: தடுமாறும் குழந்தை, நிலமில்லா நாடோடி, மாலைகளாக மாறும் டெய்ஸி மலர்கள், சுமைகளை தாங்கி நகரும் குதிரை வண்டி எல்லாமே ஒரு கணநேரக் காட்சிகள் தான்)


ஆசிரியர் - Robert Louis Stevenson


நாடு - ஸ்காத்லாந்து


தமிழ்ச் சொற்கள்:


Fairies - வனதேவதைகள்


Witches - மந்திரவாதி


Hedges - புதர்கள்


Ditches - வாய்க்கால், நீர்வடிகால்


Meadows - புல்வயல்


Clambers - இடர்பட்டுத் தவழ்ந்து செல்


Scrambles - முட்டி இடித்துக்கொண்டு நெருக்கியடித்துக்கொண்டு செல்


Brambles - முட்செடி


tramp - வீடோ வேலையோ இல்லாது இடம் விட்டு இடம் சென்றுகொண்டிருப்பவர்; சுற்றித் திரிபவர்


glimpse - கண நேரக் கட்சி 

 தமிழகத்தில் 84,414 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் - ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவர்கள்




2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 84 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கு நடைபெற உள்ளது, இந்த 2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


அதில் தமிழகத்திலிருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.


கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் இருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் நீர் தேர்வுக்காக வந்துள்ளது, அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களின் 1.5 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தில் இருந்தும் 1.2 ஒரு லட்சம் பேர் உத்திரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து 84,214 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள குறிப்பிடத்தக்கது.

 எரிக்கும் வெயில்! குழந்தைகளை வதைக்க வேண்டாம்! ஆல்பாஸ் பண்ணுங்க! மாணவர்களுக்கு ஆதரவாய் பாமக ராமதாஸ்


தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் கோடை காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


3 நாட்களுக்கு வெப்ப அலை காரணமாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளி குழந்தைகளை வதைக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.



ராமதாஸ் அறிக்கை


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13-ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும். கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக் கூட மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.


வறட்டுப் பிடிவாதம்

 


துயரத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பவர்களுக்குத் தான் அதன் வலி தெரியும் என்பர். அதே போல் சுட்டெரிக்கும் வெயிலில் வகுப்புகள் நடத்தப்படுவதால் அனுபவித்து வரும் கொடுமைகளை மாணவர்கள் மட்டும் தான் அறிவார்கள். தமிழ்நாட்டில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டை கடந்து தகிக்கிறது. மே மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கும் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் கணித்துள்ளனர். இத்தகைய சூழலில் பள்ளிகளை மே 13&ஆம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன? இது வறட்டுப் பிடிவாதமாகவே பார்க்கப்படும்.


செங்கல் சூளைக்குள் குழந்தைகள்

 


பள்ளிகளில் இருக்கும் மின் விசிறிகளும் மின்வெட்டு, பழுது உள்ளிட்ட காரணங்களால் இயங்குவதில்லை. அதனால், செங்கல் சூளைக்குள் இருப்பது போன்ற சூழலில் 3 வயது, 4 வயது குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும்? இன்னும் பல பள்ளிகளில் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லை. இத்தகைய கொடுமையான சூழலில் மழலையர் மற்றும் தொடக்க வகுப்புகளைக் கூட நடத்துவது ஏன்? அதன் மூலம் நாம் கல்வியில் எதை சாதிக்கப் போகிறோம்? என்பதே என் வினா.


குழந்தைகளின் அவதி

 


பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளுக்கு குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் புரிவதில்லை. பள்ளிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் தங்களின் அலுவலகங்களை சொகுசுபடுத்திக் கொள்ளும் உயரதிகாரிகளுக்கு பள்ளி வகுப்பறைகளில் மின்விசிறிகள் கூட இல்லை என்ற உண்மை தெரியாததால் தான் இத்தகைய முடிவுகளை எடுத்து குழந்தைகளை வதைக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளை எந்த வசதிகளும் இல்லாத வகுப்பறைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அமர வைத்தால் தான் குழந்தைகளின் அவதியை அறிவார்கள்.


விடுமுறை அளிக்க வேண்டும்

 


கொரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியதால் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. மாணவர்கள் நலன் கருதி 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...