4 January 2014

கீ ஆன்சரில் குளறுபடி : டி.ஆர்.பி. மீதான வழக்குகள் 6ம் தேதி மீண்டும் விசாரணை-Dinakaran News

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில வினாக்களுக்கு தவறான விடைகள் வெளியிடப்பட்டதாக தேர்வர்கள் டிஆர்பியில் புகார் அளித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நாளை மறுநாள் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. வழக்கு நடந்து வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் டிஆர்பி செய்ய முடியவில்லை. 

இதே நிலை நீடித்தால் இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம் செய்ய முடியாது. எனவே நாளை மறுநாள் டிஆர்பி மீதான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. 

 அதன் காரணமாக போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த வருடம் ஜூலை மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டது. 421 மையங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதில் தமிழ் பாடத்துக்கு உரிய தேர்வில் 44 கேள்விகளில் அச்சுப்பிழை இருப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் தமிழ்பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உரிய தேர்வு முடிவு முதலில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தமிழ் பாடத்திற்கு உரிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கடந்த 30 மற்றும் 31 தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 

நேற்று ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 3 நாட்கள் தான் ஆகிறது. மொத்தம் 605 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரம் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஆணையை பள்ளி கல்வித்துறை வழங்க உள்ளது.
PG TRB / TNTET update news 

TRB PG-TET I/ TET II -முதுகலை பட்டதாரி/ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்(WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR 2013 )அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன.நீதியரசர் சுப்பையா மீண்டும் jan 20 வழக்கு விசாரணக்கு ஒத்திவைத்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...