10 September 2022

 நீட் தேர்வு முடிவுகள்.. தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட் ஆஃப் குறித்து வெளியான முக்கிய தகவல்



எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் செபடம்பர் 7 ஆம் தேதி நேற்று வெளியானது. இன்று அதிகாலை மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.


இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.28 % ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 54% ஆக இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், மொத்தம் 1.32 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 67,789 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்று மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது 'கரியர் கய்டன்ஸ்' என்ற யூடியூப் சேனலில் நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இந்த ஆண்டு தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்பது சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


அதில் அவர் கடந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 138 மதிப்பெண்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 117 ஆகவும் எஸ்சி. எஸ்டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 108 மதிப்பெண் இருந்த நிலையில், இந்த ஆண்டு 93 மதிப்பெண் ஆகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில், 54.8 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 51.28 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 8,865 மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு


 


Tamil-Nadu-Veterinary-Courses-Application-Date-Notification


Tamil Nadu Veterinary Courses Application Date Notification


தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கு, பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications) வரவேற்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வகையான இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.


Bachelor of Veterinary Science & Animal Husbandry - BVSc & AH (5 ஆண்டுகள்)


Bachelor of Technology (Food Technology) – BTech (FT) (4 ஆண்டுகள்)


Bachelor of Technology (Poultry Technology) – BTech (PT) (4 ஆண்டுகள்)


Bachelor of Technology (Dairy Technology) – BTech (DT) (4 ஆண்டுகள்)


இந்த பட்டப்படிப்புககளுக்கு, பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanvas arcin என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


உயிரியல், தாவரவியல் அல்லது விலங்கியல், இயற்பியல் வேதியியல் ஆகியவற்றுடன் பொதுப் பாடப்பிரிவில் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்களும் (10+2) தொழிற்கல்வி தொடரில் விவசாயப் பயிற்சிகள் / பால் பண்ணை / கோழிப்பண்ணை படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடுகள் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அமையும்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...