Posts

Showing posts from November 8, 2014
உண்ணா விரதப்  போராட்டம்    கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்   மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது .இதை நடைமுறைபடுத்தக் கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கும் , மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள  உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது . தேதி: 24.11.2014,திங்கள்கிழமை  நேரம் :காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணி வரை  இடம் :  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ,சென்னை  அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்!       இப்படிக்கு                                                                                                                   சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்  குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அ
Image
PGTRB for the year 2013-2014 and 2014-2015 : TRB PG Notification Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 Click here for Notification            Dated: 07 -1 1 -201 4 Member Secretary
TNPSC: 5000 பணியிடத்துக்கு 10 லட்சம் பேர் பதிவு   குரூப் - 4 தேர்வுக்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வரும் டிசம்பர் 21ம் தேதி, குரூப் - 4 தேர்வை நடத்துகிறது.இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு, 4,963 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, பதிவு நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, நவ., 12ம் தேதி கடைசி நாள்.இதுவரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.  இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:  தமிழ்ப் பாடத்தில் 277 பேர்,  ஆங்கிலப் பாடத்தில் 209 பேர்,  கணிதப் பாடத்தில் 222 பேர்,  இயற்பியல்,  வேதியியலில் தலா 189 பேர்,  உயிரியலில் 95 பேர்,  விலங்கியலில் 89 பேர்,  வரலாறு பாடத்தில் 198 பேர்,  பொருளாதாரத்தில் 177 பேர்,  வணிகவியலில் 135 பேர்,  உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர் என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  கல்வித் தகுதி:   சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட்
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு2 லட்சம் விண்ணப்பம் தயார்! ' அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், ஜன., 10ம் தேதி போட்டித் தேர்வு நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்காக, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள், தயார் நிலையில் உள்ளன.டி.ஆர்.பி., அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:  *10.11.14 முதல், 26.11.14 வரை, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும்.  *விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய்.  *பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வாங்கிய இடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்; வேறு எந்த வகையில் அனுப்பினாலும், நிராகரிக்கப்படும்.  *வரும், ஜனவரி, 10ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.  * தேர்வுக்கு, 150 மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு, அதிகபட்சமாக, 4 மதிப்பெண்; பணி அனுபவத்திற்கு, அதிகபட்சமாக, 3 மதிப்பெண் என, மொத்தம், 157 மதிப்பெண்ணுக்கு, இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படை யில், தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.