Posts

Showing posts from July 2, 2016
ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம். பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும் .அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம் . தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும் . ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்ட