18 May 2014

SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு. பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21ம் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை பத்து மணிக்கு நடக்கிறது. மொழிப்பாடம், கணிதம், அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆண், பெண் உள்பட மொத்தம் 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமில்லை. டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்து விட்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பர். ஆறு முதல் பத்து ஆண்டுகளில் அவர்கள் பிளஸ் 2வில் படித்த பாடப்பிரிவை பொறுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வீடு தேடி வரும்.இதனால், பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவ-மாணவியர் டாக்டர், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர். இதனால், நாளுக்கு நாள் மவுசு கூடியது, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உருவானது. லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கும் நிலை ஏற்பட்டது.இதற்கு முன், அந்தந்த பயிற்சி நிறுவனங்களில் பணம் கட்டி படிக்கும் நிலை இருந்தது. தற்போது, அரசு சார்பில் விண்ணப்பம் விநியோம் செய்யப்பட்டு ஒற்றை சாளரமுறையில் அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையோர் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில் பதிவு மூப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்றால் உடனே ஆசிரியர் வேலை. அவர்கள், கடந்த ஆண்டு முடித்தவர்கள் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் முடித்தவர் ஆனாலும் சரி. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த டி.இடி. தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்து விட்டனர். மேலும் பல்லாயிரம் பேர் டி.இ.டி.தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.இதனால், முன்பு போல் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், பதிவு மூப்பு அடிப்படையில்வேலை என்ற நிலை மாறிவிட்டது. மேலும் பல்லாயிரம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர். இது போன்ற நிலையால், இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு தேனி மாவட்டத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது. தேனி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 14ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 2 ம் தேதி ஆகும்.ஆனால், இது வரை சி.இ.ஓ. அலுவலகத்தில் 9 விண்ணப்பங்களும், டயட்டில் 88 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டி.இ.டி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறையினை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள்இறுதிப்பட்டியல்வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.

  ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...