20 July 2017

வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, 
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு வகை ஊழியர்கள்
 மற்றும் அதிகாரிகள் பணி இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம்,
புதியவர்கள்நியமிக்கப்படுகின்றனர்.இதற்காக,போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மற்றும் துறை ரீதியான புதிய
 நியமனம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு திட்ட
அறிக்கை வெளியிடப்படுகிறது.இந்தஆண்டுக்கானதிட்ட
அறிக்கைப்படி, வருவாய் துறையில், வி.ஏ.ஓ., பதவிக்கான,
494 காலி இடங்களை நிரப்ப, செப்., 17ல், எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.

இந்த தேர்வுக்கான, அதிகாரபூர்வ அறிவிக்கை, ஜூன் முதல்
 வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூலை
 மூன்றாம் வாரமாகியும், இன்னும் அறிவிக்கை வெளியாகவில்லை.

இது குறித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய போது,
'வி.ஏ.ஓ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, அதிகாரிகள்
தெரிவித்து உள்ளனர்.அதாவது, மாநிலம் முழுவதும், 32
மாவட்டங்களிலும், வி.ஏ.ஓ., காலியிட விபரங்கள்
இன்னும், தமிழக அரசிடமிருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வரவில்லை.

காலியிட விபரம் மற்றும் புதிய நியமனத்துக்கான அனுமதி கடிதம்,
அரசிடமிருந்து வந்ததும் தேர்வு அறிவிக்கப்படும் என,
டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.'தற்போதைய
 நிலவரப்படி, ஆகஸ்டில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகவும்,
அக்., இறுதி வாரத்தில் தேர்வு நடக்கவும் வாய்ப்புள்ளது' என,
அதிகாரிகள் கூறிஉள்ளனர்
Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I - 2016-17
TENTATIVE ANSWER KEY

01_Tamil09_Geography17_Physical Dir Grade I
02_English10_Economics
03_Mathematics11_Commerce
04_Physics12_Political Science
05_Chemistry13_Bio Chemistry
06_Botany14_Micro Biology
07_Zoology15_Home Science
08_History16_Telugu

          

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...