15 February 2022

 திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது: தேர்வுத்துறை அதிரடி


தமிழகத்தில் தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தற்போது தமிழ்நாடு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கும் மத்தியிலும் மாணவர்கள் உற்சாகமாக திருப்புதல் தேர்வில் பங்கேற்று வந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்ததை அடுத்து, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.


ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் தேர்வு வினாத்தாளும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியானது. அதுகுறித்து வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று நடைபெறக்கூடிய உயிரியல் வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகியது. அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.


இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் முக்கியமாக திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு பொது தேர்வு மாணவர்களுக்கு இருக்கிறது. மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் கட்டாயம் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.




 தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!


தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் (ஆண்கள்: 35,56,085, பெண்கள்: 40,32,046, மூன்றாம் பாலினம்: 228 பேர்) வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


18 வயதிற்குள்: 17,81,695, 

19-23 வயதிற்குள் 16,14,582,

 24-35 வயதிற்குள்: 28,60,359, 

36-57 வயதிற்குள்: 13,20,337, 

58க்கு மேற்பட்டோர் 11,386 பேர் என்று மொத்தம் 75,88,359 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

  ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு.. 3,803 பணியிடங்கள்.. யாருக்கெல்லாம் சான்ஸ்..?


சென்னை: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக போகிறதாம்.. அந்த பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.


4 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.. நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.


அமைச்சர் உறுதி

 

அதேபோல, தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஐ பெரியசாமி பதிலளித்து பேசும்போது, நிறைய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சிறப்பு அறிவிப்பை அப்போது கூறியிருந்தார்.


நியாய விலை

 


இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது: "தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும், 9639 பகுதிநேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன.


நடவடிக்கை

 


இந்த நியாயவிலை கடைகளில் 31.12.2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


வேலைவாய்ப்பு

 


இப்போது 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு நியாயவிலை கடையினை கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். 1,128 விற்பனையாளர்கள் தலா 2 நியாயவிலை கடைகளையும், 222 விற்பனையாளர்கள் 3 கடைகளையும், 4 நியாயவிலை கடை, 15 விற்பனையாளர்கள் தலா 5 நியாயவிலை கடைகள் மற்றும் அதற்கு கூடுதலாக கடைகளை நிர்வகித்து வருகின்றனர். ஒரு தாய்க்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிநேர கடைகளை கவனித்து கொள்வது கூடுதல் பொறுப்பின் கீழ் வராது.


ஒரே பணியாளர்

 


ஆயினும், ஒரே பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட முழுநேர நியாயவிலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும். எனவே முழுநேர நியாய விலை கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை இணைபதிவாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 'தேர்வு தேதியை மாற்றுக' கோரிக்கை விடுக்கும் வருங்கால ஆசிரியர்கள்


தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்காக படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர்.


15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் உருவாகி லட்சக்கணக்கானோர் பி.எட், எம்.எட், எம்.பிஎல், பி.எச்டி என முடித்தார்கள். அப்போது படிக்காமலே பலர் பட்டம் பெற்றுள்ளார்கள் என சர்ச்சை எழுந்தது. இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு வைக்க முடிவு செய்தது தமிழ்நாடு அரசு.


அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் (TRB) தேர்வுகள் நடத்திவருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களை மதிப்பெண் சீனியாரிட்டிப்படி பணியில் சேர்க்கிறது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் பி.ஜி என கல்லூரியில் முதுகலை பயின்றவர்களுக்கான தேர்வு நடத்துகிறது. பிப்ரவரி 16ஆம் தேதி முதுகலை கணக்கு பாடத்துக்கான தகுதி தேர்வு நடத்துகிறது.


அதே பிப்ரவரி 16ஆம் தேதி யுஜிசி, பேராசிரியர் பணிக்கு தகுதி தேர்வு நடத்துகிறது. இரண்டு தகுதி தேர்வுகளும் ஒரேதேதியில் நடப்பதால் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பம் செய்த பட்டதாரிகள் தற்போது அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனர். டி.ஆர்.பி அல்லது யூஜிசி இரண்டில் ஒன்றில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் தேர்வு எழுதுபவர்கள்.

 மாசிமகம் திருவிழா: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு



புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.


சாரம் மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், 33ம் ஆண்டு மாசி மக தீர்த்த விழா நடைபெறவுள்ளது. மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடிவரும் நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதமிருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


இந்த ஆண்டு மாசிமகம் திருவிழா வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16ம் தேதி விடுமுறை அளித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.


அதேநேரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் 16ஆம் தேதியன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...