4 March 2014

TET தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக - Request Letter 

பெறுநர்
 மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்,
சென்னை.

பொருள்: முதுகலை ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்படுவதுபோல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக.

 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது.

1 முதல் 3 ஆண்டுகள் வரை1 மதிப்பெண்ணும் 3 முதல் 5ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில் ஒளியேற்றும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் அம்மா.
டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல் 

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, டி.இ.டி., தேர்வர்கள், நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், டி.இ.டி., தேர்வர்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வெழுதி, 90 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றோம். தற்போது, 5 சதவீத சலுகை அடிப்படையில், 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், நாங்கள், அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், வேலை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லை. எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கிறது. அதே முறையை, பட்டதாரி ஆசிரியர் தேர்விலும், கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்
பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ ?அச்சத்தில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் ! நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள். சான்றிதழ் சரிபார்ப்பு அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. 

இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதி 5 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 45 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

முதல்கட்டமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்க்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் அச்சம் இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்ற பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. 

தேர்தல் அறிவிப்பு வந்ததுமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த காலதாமதம் ஆகி வருகிறது. 

இதற்குள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

பழைய அறிவிப்புக்கு பொருந்துமா? ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொருத்தவரை, அதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு தேர்வும் முன்னரே நடத்தப்பட்டுவிட்டது. 

எனவே, நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தாது என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது. அரசு உத்தரவுப்படி பணிகளை மேற்கொள்வோம்" என்று பதிலளித்தனர்.
"டெட்' தேர்வு: பணி நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம்-Dinamani 

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை கோரிக்கை மனுவுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தேர்வர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராக பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. 

எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப்படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...