Posts

Showing posts from February 2, 2014
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற 5 ஆண்டுகால சலுகை அளிக்க பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை
சொல்வது படி பார்த்தால்,SSLC ,HSC என கொண்டுவந்த காலத்தில் அதற்குமுன் PUC படித்தவர்களை மறுபடியும் ஒரு தேர்வு எழுதிதான் நீங்கள் HSC தகுதி பெறமுடியும் எனகூறினார்களா ? For think...... எதற்காக சொல்கிறேன் என்றால்,23.08.2010க்கு பின்DTED,BEDமுடித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனக்கூறியிருந்தால் நீங்கள் சொல்லுவது நியாயம்.2001இல்மாவட்டத்திற்கு ஒன்று என( DIET ) HSCஇல் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தான் கவுன்சிலிங் வைத்து படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை13வருடங்களாக தராதது யாருடைய குற்றம் என்பதை தங்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்.காலத்தின் கட்டாயம் என நீங்கள் சொன்னாலும்,ஒரு வழி வேலைவாய்ப்பை(வேறு எந்தவெலைக்கும் இந்த படிப்பு உதவாது ) மட்டுமே பெற்றுள்ள படிப்பாகிய ஆசிரியர் பட்டய படிப்பினை பெற்றோர்கள் கனவுடன் கடன் பெற்று படிக்க வைத்த தியாகதிற்க்காகவாவது தற்போது இந்த குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் வந்தபிறகு படிப்பவர்கள் எழுதவேண்டும் எனக்கூறியிருந்தால் ஒருவேளை இடஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் போலும்.இன்னொரு விஷயம் நீங்கள் கூறியிருப்பதை போல ஆசரியர் பணி மருத்துவ படிப்பைவிட உயர்ந்த்தது எ
தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம். "தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது, '' என, உயர்கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ''ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 'மதிப்பெண் சலுகை வழங்கலாம்' எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு, அதை பின்பற்றவில்லை,'' என்றார். அதற்கு, அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதை பின்பற்ற வேண்டும் என அவசியம் இல்லை. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இட ஒதுக்கீடு: இதில், தேர்ச்சி பெற, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலை வழங்கும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. தரமான ஆசிரியர்: பள்ளித் தேர்வில், ம
ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் தளர்த்தப்படுமா? ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது சனிக்கிழமை அவர் பேசியது: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்பட்டபோது, அதை காத்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி முறையில் இடஒதுக்கீட்டு முறை என சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை அரசியலாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது பொதுவான பிரச்னையாகும். எனவே, இதற்கு தகுந்த வழியை முதல்வர் ஜெயலலிதா உருவாக்குவார் என நம்புகிறேன் என்றார் தமிழரசன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் தலையிட கோரிக்கை. ஆசிரியர் தகுதி தேர்வில் கல்வித் துறை அரசாணையின்படி மதிப்பெண் தளர்வு வழங்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் போன்று மாற்றுத் திறனாளி ஆணையமும் தலையிடவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் மு.மணிவாசனிடம் சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கோரிக்கை மனுவை வியாழனன்று வழங்கினர்.2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணிகளுக்கு தகுதி தேர்வு நடத்தி நியமிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில்,மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்கலாம் எனதேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழிகாட்டு நெறிமுறை அளித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக கல்வித்துறை அரசாணை(எண்.181) வெளியிடப்பட்டது.எனினும், இந்த அரசாணை விதிகள் பின்பற்றப
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று (03.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றது