Posts

Showing posts from April 13, 2023
Image
  வெளியானது UGC -NET தேர்வு முடிவுகள் 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி (UGC- NET Exam For Assistant Professor' as well as 'Junior Research Fellowship and Assistant Professor) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ugcnet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நெட் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். இரண்டாவது தாளில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய:  ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்; UGC NET DECEMBER 2022 SUBJ
Image
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் சார்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.02.2023 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.03.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 15,430 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் . 23.07.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தியின்படி , அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.2022 முதல் 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.  எனவே , விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது OT OUT
Image
  தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வித் திட்டம்- 20-ம் தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி, அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1.50 லட்சம் இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆன்லைன் வழியில் பதிவு செய்யும் வழிமுறை உள்ளிட்ட முழுமையான அறிவிப்பு ஓரிரு த
Image
  NEET UG 2023: இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் மீண்டும் வாய்ப்பு! கால அவகாசத்தை நீட்டிக்க காரணம் இதுதான்! தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.  2023 நீட் தேர்வு எப்போது? 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் த
Image
  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று ( ஏப்ரல் 13) நள்ளிரவு 11.30 மணியுடன் முடிவடைகிறது. 2023-24 ஆம் ஆண்டின் நீட் தேர்வு மே -7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
Image
  புதுவையில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 1.7.2015 முதல் 30.9.2018 வரை, பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்துக்கொள்ள தளர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த தளர்வு 4.4.2023 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். எக்காரணம் கொண்டும் இச்சலுகை கண்டிப்பாக நீட்டிக்கப்படமாட்டாது. 1.7.2015-க்கு முன்னர் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பழைய வேலைவாய்ப்பு அட்டை அல்லது புதிய வேலைவாய்ப்பு அட்டை (மறுபதிவு செய்தவர்கள்),வேலைவாய்ப்பகத்தில் பதியப்பட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் இணைக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவுகளுக்கு பழைய மூப்பு தேதி வழங்கப
Image
UGC நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.!!! யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு முழுவதும் 8.34 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இை ணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.