கல்லூரி உதவி பேராசிரியர் ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.
கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு ‘நெட்’ எனப்படும் தேசிய அளவி லான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் 89 நகரங்களில் நடந்தது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் தேர்வு நடைபெற்றது.சென்னையில் கோபாலபுரம், முகப்பேர் டிஏவி மேல்நிலைப் பள்ளிகள், அண்ணா நகர் எஸ்பிஏஓ மேல்நிலைப்பள்ளி, கிண்டி ஐஐடி, தாம்பரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்பட 22 மையங்களில் ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் தேர்வெழுதியதாக சிபிஎஸ்இ மண்டல அதிகாரி கே.சீனிவாசன் தெரிவித்தார்.