23 September 2014

டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..

டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது. 

வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி விக்ரம்ஜித் சென் மற்றும் தீபக்மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வானது இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் இது குறித்த செய்தி வெளியாகிறது.
டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு... 

டெல்லி உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் ஒரு  மணி நேரம் வாதம் நீடித்தது. வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்கு முன்னுரிமை  கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
TNTET:மதுரை நீதிமன்ற தடையானை விவரம்.

மதுரை நீதிமன்ற தடையானை விவரம்: மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட தடையானையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இன்று தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால் இன்று சில காரணங்களுக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறுகிறதாம்.அதனால்மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்படுவது சந்தேகத்திற்குறியதாகிறது. ஆயினும் நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தாலும் இன்று தடையானை நீக்கப்படும் என்றும் சில நம்பத் தகுந்த வட்டாரம் கூறுகிறது.
TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு 

ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. 

வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.

 இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்
ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன் 

வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் தரக்கூடாது. அதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம் விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட கோரிக்கை - தினகரன் 

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் செய்யப்பட்டும் பணி நியமன சிக்கலைத் தீர்க்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை கேட்டுக் கொண்டுள்ளது. 

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: வெயிட்டேஜ் என்பது நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மேற்கொண்ட அரசின் கொள்கை முடிவல்ல.

 வெயிட்டேஜ் முறையை பரிந்துரை செய்தவர்கள் வல்லுநர்கள் அல்ல. இது கூடுதல் மதிப்பு தரும் முறையே தவிர, அடிப்படைத்தகுதிக்கு கீழ் உள்ள தகுதிக்கு தரும் மதிப்பு அல்ல. தேசிய ஆசிரியர் கல்வி மன்றம் (என்சிஇஆர்டி) வழிகாட்டுதலில் பத்தி 9(பி) மிகத் தெளிவாக கூறியுள்ளது என்னவென்றால், டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு பணி நியமனத்தின் போது மதிப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்டி பிரிவில் 50 சதவீதத்துக் கும் மேல் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பவில்லை. பொதுப் பிரிவில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒருவர்கூட தேர்வாகவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் தீர்ப்புகள் வரும்வரை காத்திராமல், முதல்வர் நேரடியாக தலையிட்டு பணி நியமனம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை - தினகரன்

பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனை வருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். 

ஆனால் 3% பேருக்குத்தான் பணி நியமனம் வழங்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சுமார் 200 பேர் தலைமைச் செயலகம் வந்தனர். முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து பேச அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் போயஸ் கார்டனுக்கு சென்று அங்கு முற்றுகையிட்டனர். 

 இதையடுத்து, 2 பேரை மட்டும் அங்குள்ள அதிகாரிகள் கார்டனுக்குள் அனுமதித்தனர். அங்குள்ள அதிகாரிகள் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களிடம் பேசினர். பின்னர் வெளியில் வந்த ஆசிரியர் இருவரும் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பட்டதாரி ஆசிரியர் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. 

மொத்த நியமனத்தில் 3% பேருக்கு மட்டுமே பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் 934 பேருக்கு பணி நியமனம் கிடைக்காது. பொதுப் பிரிவில் வருவோரும் மாற்றுத் திறனாளிக்கான இடங் களை பெற்றுக் கொள்வார்கள். அதனால் மாற்றுத் திறனாளிகளுக்குரிய இடங்களில் அவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும். அதேபோல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளிகளில் மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். 

எஸ்எஸ்ஏ சிறப்பு ஆசிரியர் பணியை மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியருக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். ஒவ்வொரு முறையும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால், அதன்படி அறிவிக்கவில்லை. 

எனவே நேரடியாக முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்று கேட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்தோம். ஆனால் முதல்வரை சந்திக்க எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே நாங்கள் முதல்வரின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு வந்தோம். அங்கும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அங்குள்ள அதிகாரி மட்டுமே எங்களிடம் பேசினார். கோரிக்கை குறித்து தெரிவித்தோம். ஆனால் சரியான பதில் ஏதும் கூறவில்லை. இவ்வாறு மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்?-Dinamani தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் முறை மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு நடைபெறும்போதே, தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். எனினும், பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் தாக்கல் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவு காரணமாக பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...