Posts

Showing posts from November 6, 2014
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 10-ம் தேதி முதல் விநியோகம்   முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது.  இதற்கான அறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இருந்து விநியோகம் தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் வழங்கப்பட இருக்கிறது.  எனவே இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
PGTRB Exam 2014-15  PG TRB Application Sales From:10.11.2014 PG  TRB Application Sales - Venue:Concern District - CEO Office,  PG TRB Exam Date:10.01.2015.  Notification Will Publish Soon in TRB Website.
Flash News :PG TRB முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகிறது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-2014, 2014-2015 ) போட்டி எழுத்துத்தேர்வு 10.01. 2015 அன்று நடைபெறவுள்ளது இதற்கான அறிவிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளது .
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்  கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (AEEO) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.  பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது, பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்), பங்களிப்பு ஓய்வூதிய நிதி (சிபிஎஃப்) மற்றும் ஓய்வூதிய கணக்கு வழக்குகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்கிறார்கள்.   உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனத்தில் 60 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 40 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்
உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுகோள் கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம்:   உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுகோள்-கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம்