Posts

Showing posts from September 22, 2022
Image
  எங்க உயிரை வாங்குறாங்க.. C.M , P.Mக்கு எக்ஸாம் வையுங்க..! சீமானின் புத்தி ஐடியா .!! செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், உலகத்திலே கல்வியில் முதல் இருக்கின்ற நாடு தென் கொரியா. 8 வயதில் தான் பிள்ளைகளில் ஒன்றாம் வகுப்பிலே சேர்க்கிறார்கள். நீங்கள் அந்த 8 வயதில் என்னை பொதுத் தேர்வு எழுத சொல்கிறீர்கள், இதெல்லாம் என்ன கொடுமை என்று பாருங்கள் ? நீட் எழுதுவார்கள், பொது தேர்வு எழுதுவார்கள், வழக்கறிஞருக்கு எழுதனும், நீதிபதிக்கு வர வேண்டும் என்றால் எழுதணும், போலீசாக வர வேண்டும் என்றால் தேர்வு எழுதணும், எல்லாவற்றிற்கும் தேர்வு எழுதணும். ஆனால் நாட்டை ஆளுகின்ற முதலமைச்சர், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் நீங்கள் எந்த தேர்வு எழுதவில்லையே? எப்படி எல்லாவற்றிற்கும் தேர்வு. உள்ள போவதற்கு தேர்வு, வெளியில் வருவதற்கு தேர்வு, அப்போ நாட்டை ஆளுகின்ற பிரதமர் ஒரு தேர்வு எழுதினால் என்ன? சமூகம், அறிவியல், பொருளாதாரம், வேளாண்மை, வரலாறு, இலக்கியம் இதில் எல்லாம
Image
  கொரோனொ கற்றல் இழப்புகளை சரிசெய்த இல்லம் தேடி கல்வி திட்டம்: ஆய்வு சொல்வதென்ன? இல்லம் தேடிக் கல்வி திட்டம் கற்றல் இடைவெளியை குறைத்துள்ளது கலிபோர்னிய பல்கலைக்கழக பேராசிரியர் கார்திக் முரளிதரன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவை, திருச்சி, விருதுநகர் ,காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 5 முதல் 10 வயதுடைய 19,000. மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பேராசியர் கார்திக் முரளிதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிய பின்னர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஐந்து வயது முதல் வயது வரை உள்ள பள்ளி குழந்தைகள் கொரொனொ பொதுமுடக்கத்தால் கற்றல் திறனை பெருமளவில் இழந்துள்ளதை கண்டறிந்தனர். குறிப்பாக, 8 வயதுடைய மாணவன் 6 வயதுள்ள மாணவனின் கற்றல் திறனை பெற்றிருந்ததாக தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார். இல்லம் தேடிகல்வித்திட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மே,மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் மேற்கொண்ட ஆய்வில் மாணவர்களு
Image
  தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்: பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்: பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டங்கள் தயாரிப்பு பணி மொழிபெயர்ப்பு பணி மென்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக பள்ளிகல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது  182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்கால ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
  மாற்றுப் பணி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. பள்ளிக கல்வித்துறை உத்தரவு.. மாற்றுப் பணி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.. மாற்றுப் பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வி, திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாற்று பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Image
  இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு கலிபோா்னியா பல்கலை. பாராட்டு தமிழகத்தில் கரோனாவால் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் குறைந்துள்ளது என கலிபோா்னியா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியா் காா்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரோ ஆகிய மூவா் குழு கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் பள்ளி மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள், அதனை சீா் செய்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் குறித்து கலிபோா்னியா பல்கலை. பேராசிரியா் காா்த்திக் முரளிதரன் கூறியதாவது: இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 220 கிராமங்களில் 19 ஆயிரம் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்தோம். 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடக்கக் கல்வியில் கிராமப்புற மாணவா்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தகவல்களை திரட்டினோம். அதன் தொடா்ச்சியாக ஊரடங்கு வந்ததன் பின்பாக, கற்றல் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கரோனாவுக்கு முன்பாக எடுத்த த