Posts

Showing posts from June 21, 2017
நீட் தேர்வு முடிவு வெளியாவது எப்போது? 11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்தும், வருகிற 26–ந் தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிடலாம் என்றும் கடந்த 12–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே தேர்வு முடிவு நேற்று வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படவில்லை. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் கூறுகையில் நீட் தேர்வு முடிவு வெளியிடும் தேதி விரைவில் வெளியிடப்படும் என்றார்.
என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் தமிழகத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங்(பி.இ.) சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அதற்காக பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 88 ஆயிரத்து 778 பேர் மாணவர்கள். 52 ஆயிரத்து 299 பேர் மாணவிகள். விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, அண்ணாபல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண்ணை வெளியிட்டார். உடனே அனைத்து மாணவர்- மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் www.annauniv.edu என்ற அண்ணாபல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று அவர்களுக்கான இ-மெயில் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை பதிவு செய்தால் அவர்களுக்கு ரேண்டம் தெரியவரும்.