Posts

Showing posts from January 3, 2014
முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது  வழக்கில் நீதிமன்ற ஆணை பெற்ற 7 பேரும்.இன்று (02.01.14) சென்னையில் உள்ள டிஆர்பி அலுவலகத்துக்கு நீதிமன்ற ஆணையுடன் நேரில் சென்று தங்களையும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி தனித்தனியாக மனுஅளித்ததாகவும் மனுவைப்பெற்றுக்கொண்ட டிஆர்பி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக்கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதற்கிடையில் புதியதாக இதே போன்று தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழஙக்கோரி மேலும் சில வழக்குகள் நளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
முதுகலை பட்டதாரி/ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்று 03.01 2013 விசாரணை  TRB PG-TET I/ TET II ( முதுகலை பட்டதாரி/ஆசிரியர் தகுதித்தேர்வு) சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் 03.01 2013 இன்று விசாரணைக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNTET 2013 NEWS UPDATE  ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.  இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் 03.01 2013 இன்று விசாரணைக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன