Posts

Showing posts from February 3, 2015
கல்வித்திட்டம் மாற்றம் : 4 ஆண்டாகிறது மேல்நிலைக்கல்வி 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த போவதாக அறிவித்து இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது. அதன்படி 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி கல்விக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு என 2 அடுக்காக பிரித்து பயிற்றுவிக்கப்பட்டு வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி திட்டத்தை மாற்றி 8ம் வகுப்பு வரை படித்து முடித்த பின்னர் தொடர்ந்து 4 ஆண்டுகள் படிப்புக்கும் ஒரே கட்டமைப்பாக மேல்நிலை கல்வியை மாற்றும் வகையில் கல்வி திட்டத்தை உருவாக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்தாகி விடும் நிலை உள்ளது. மேலும் குறைந்த பட்ச கல்வி தகுதியாக ஒரு சில பணிகளுக்கும், ஐடிஐ போன்ற தொழிற்கல்விக்கும் 10ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை 8ம் வகுப்பாக குறைத்து விடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கும் பல்வேறு அரசு பணிகளுக்கான தகுதியை 10லிருந்து 12ம் வகுப்பாக உயர்த்துவதற்கு வாய்
DEO EXAM RESULT :TNPSC இந்த வாரம் வெளியிட உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படஉள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.