14 April 2015

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான வழக்கு: 21-ல் விசாரணை - Dinamani
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக, இது தொடர்பான மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத், "இவ்வழக்கில் தற்போது மனுதாரர் லாவண்யாவின் மனுவுக்கு மட்டும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மற்ற மனுதாரர்களுக்கான பதிலை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்று கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் தமிழக அரசு லாவண்யாவின் மனுவுக்கு தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானதாகக் கருதுகிறோம். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்' என்று கூறினர்.
மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது. கோர்ட் எண் 2 இல் வழக்கு எண் 45 ஆவதாக இடம் பெற்றது

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...