9 September 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு-வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் செப்., 29ல் உண்ணாவிரதம்? 

 தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். 

பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 

இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

 கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையில் உள்ள, 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழாசிரிய சங்க மாநில செயலாளர்கள் சந்திரசேகரன், அரசுமணி, ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர், சாமுவேல், சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், இளவரசன், பழனியாயி, ஹைதர்அலி, ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது:

திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. 

இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. 

நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள். இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.
தீவிரமாகும் பட்டதாரி ஆசிரியர்களின்ரேஷன் கார்டு, சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்-Dinakaran News வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை திரும்ப பெறக்கோரி, தற்கொலை முயற்சி, ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், பிரச்னையை தீர்க்க வேண்டிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் மவுனமாக இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62ஆயிரம் பேர் உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் அவர்கள்ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்தமாதம் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் தொடங்கினர். 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அது குறித்து அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் செப்டம்பர் 1ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பட்டதாரிகள் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.பட்டதாரிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் தரப்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் பணி நியமன கவுன்சலிங் நடத்த தடை கேட்டு மனு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதி மன்றம் கவுன்சலிங் நடத்தலாம் ஆனால், பணி நியமனம் செய்யக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது. ஆனால், பணி நியமனம் ரகசியமாக நடப்பதாக அறிந்த பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கடந்த 2ம் தேதி முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து 300 பேரை கைது செய்தனர். மீதம் உள்ள பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்படைக்க நேற்று காலை டிபிஐ வளாகம் வந்தனர். ‘இந்த அலுவலகம் சுடுகாட்டைப் போன்றது’ என்று கூறி பிணங்களைப் போல தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். திங்களாக கிழமை குறை கேட்பு நாள் என்பதால் கைது செய்யாமல் விட்டனர்.இதையடுத்து பட்டதாரிகள் அனைவரும் டிஆர்பி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் சான்றுகளை ஒப்படைக்க டிஆர்பி அலுவலகத்துக்குள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சான்றுகளை வாங்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த தொடர் போராட்டம் குறித்து பட்டதாரி செல்லதுரை கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற பெயரால் தேர்ச்சி பெற்றவர்களை ஏமாற்றுகின்றது.அதனால் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். கடந்த 20நாட்களாக பெண்களும் ஆண்களுமாக இந்த தொடர் போராட்டம் நடத்தும் எங்களை அரசு கண்டுகொள்ளாதது வேதனை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு செல்லதுரை கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு-வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் செப்., 29ல் உண்ணாவிரதம்? தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையில் உள்ள, 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழாசிரிய சங்க மாநில செயலாளர்கள் சந்திரசேகரன், அரசுமணி, ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர், சாமுவேல், சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், இளவரசன், பழனியாயி, ஹைதர்அலி, ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நூதன போராட்டம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்துசெய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நேற்று காலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர். அவர்கள், பள்ளி கல்வித்துறையை சுடுகாடாக பாவித்து, பட்டதாரி ஆசிரியர்களை பிணக்கோலத்தில் வைத்து போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். இதனை அறிந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த வெள்ளைத்துணி மற்றும் மாலை ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தங்கள் வாகனங்களில் ஏற்றி கோயம்பேட்டில் கொண்டு விட்டனர். தங்களின் போராட்டம் தொடரும் என பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

  TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப்...