Posts

Showing posts from January 1, 2015
டி.ஆர்.பி., போட்டித்தேர்வு கல்வி அதிகாரிகள் ஆலோசனை மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜன.,10ல் நடக்கும் இத்தேர்வை மதுரையில் 8326 பேர் எழுதுகின்றனர். இதற்காக 19 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டம் குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதன்முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு எண், பெயர் உட்பட விவரங்கள் குறிக்கும் கம்ப்யூட்டர் ஒ.எம்.ஆர்., சீட்டில் (விடைகள் இதில் தான் குறிப்பிட வேண்டும்) தேர்வர்களின் போட்டோ இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும் முதல் தாளில் அச்சாகிறது. இந்த புதிய முறை வருகிற 10-ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார். அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது. மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும். தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தே