Posts

Showing posts from August 4, 2022
Image
  மாணவர் தற்கொலையை தடுக்க என்ன வழி? தோல்வியே இல்லாத வகையில் தேர்வு முறையில் தேவை மாற்றம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூர் கிராமத்தின் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் மரணமும், அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரமும் தமிழகத்தில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவ - மாணவியர் அடுத்தடுத்து தற்கொலை செய்து உள்ளனர். இது குறித்து, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் கூறியதாவது:உளவியல் ரீதியாக இதை, 'மந்தை நடத்தை' என்று சொல்கிறோம். அதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும்போது, தானும் அதேபோன்று செய்ய வேண்டும் என்ற மனநிலை மாணவ - மாணவியருக்கு உருவாகிறது. நீண்ட காலம் தனிமையில் இருப்போர், மனதிற்குள் எதையாவது வைத்து புழுங்கி கொண்டிருப்போர் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடும்.தொடர் தற்கொலைகள் நிகழ்ந்து, அது பரபரப்பான செய்தி ஆகும்போது, அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்களுக்கு பிள்ளைகள் மீது பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு குழந்தை மனம் விட்டு பேசுக
Image
  அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வி துறை உத்தரவுப்படி, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், தங்களின் இணையதளத்தில், தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளன. இணையதள வசதியில்லாத கல்லுாரிகள், தங்கள் அறிவிப்பு பலகையில், தரவரிசை பட்டியலை ஒட்டியுள்ளன.சென்னை மாநில கல்லுாரி, பாரதி மகளிர் கல்லுாரி உட்பட, சில அரசு கலைக் கல்லுாரிகள் நேற்று வரை தரவரிசை பட்டியலை, இணையதளத்தில் வெளியிடவில்லை. சென்னையில் உள்ள ராணிமேரி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 24 வகையான இளநிலை படிப்புகளுக்கு, 2,000 இடங்கள் உள்ளன. ஆனால், தரவரிசை பட்டியலில் 46 ஆயிரம் பேர் இடம் பிடித்துஉள்ளனர்.பி.ஏ., தமிழில் சேர, 3,121 பேர்; ஆங்கிலத்துக்கு, 2,649 பேர்; மேம்பட்ட தமிழுக்கு 36 பேர்; மேம்பட்ட ஆங்கிலத்துக்கு நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.கார்பரேட் செக்ரட்ரிஷிப் சேர, 3,175 பேர்; கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத மற்ற கணினிசார் பாடப் பிரிவுகளில் சேர, 6,571 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேதியியல் படிக்க, 2,516 ப
Image
  கணினி, அரசியல் அறிவியல் பாட பிரிவுக்குஆசிரியர் இல்லாமல் தவிக்கும் அரசு பள்ளி குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கணினி, அரசியல் அறிவியல் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.குரோம்பேட்டை, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. லட்சுமிபுரம், நியுகாலனி, பொழிச்சலுார், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளை சேர்ந்த ௧,267 மாணவர்கள் படிக்கின்றனர்.இதில், கணினி பிரிவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும், 200 பேர். பழமையான இப்பள்ளி யில் கணினி, அரசியல் அறிவியல் பிரிவுகளுக்கு, இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், இப்பாடங்களை படிக்க முடியாமல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அலட்சியம்ஆசிரியர்களே தனியாக பணம் கொடுத்து, கணிணி பாடம் நடத்த அவ்வப்போது வெளியில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வருகின்றனர். இப்பள்ளியில், காலம் காலமாக அரசியல் அறிவியல் பிரிவு இருந்து வருகிறது. அப்பிரிவுக்கும், ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை.மற்ற ஆசிரியர்கள் குறிப்பு கொடுத்து, மாணவர்கள் படிக்க உதவுகின
Image
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நாளைமுதல் கலந்தாய்வு.. இத்தனை விண்ணப்பங்களா..? கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் சார்ந்த படிப்புகள் மீதான மோகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குறைந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்கு ஒரு இஞ்சினியர் இருந்த காலம் கடந்து தற்போது வீட்டுக்கு இரண்டு இஞ்சினியர் என்ற காலம் வந்துவிட்டது. மேலும், இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆட, மாணவர்களின் பார்வை தற்போதைய நிலையில் கலை மற்றும் அறிவியல் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் இந்த வருடம் மட்டும் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது.
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் கூடுதலாக 1030 பேர் ஆசிரியர்கள் நியமிக்க முடிவு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் கூடுதலாக 1030 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் மேலும் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், இதன் மூலம் 3237 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி 1030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், 2020-21ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம்