Posts

Showing posts from September 19, 2023
Image
  அரசுப் பள்ளிகளில் சீரழியும் கல்வித் தரம்; ஆசிரியர் காலியிடங்களை நிரப்புங்கள்- அன்புமணி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும். தமிழக அரசப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்த 2022ம் ஆண்டுக்கான ஆண்டு கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report-ASER) அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் 59.1% விழுக்காட்டினருக்கு தமிழ் எழுத்துக்களைக் கூட படிக்கத் தெரியவில்லை; 31.1% விழுக்காட்டினருக்கு எழுத்துகளைப் படிக்கத் தெரிந்தாலும் சொற்களை படிக்கத் தெரியவில்லை; 42 விழுக்காட்டினருக்கு 1 முதல் 9 வரையிலான எண
Image
  NET Exam: 2024-ம் ஆண்டு நீட் தேர்வு தேதி அறிவிப்பு - முழு விபரம்! நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக இன்று (செப்.19) அறிவித்துள்ளது. அதன்படி, ஜேஇஇ (JEE Main) முதல் தேர்வு 24 ஜனவரி 2024 முதல் 1 பிப்ரவரி 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு 1 ஏப்ரல் 2024 முதல் 15 ஏப்ரல் 2024 வரையும் நடைபெற உள்ளது. மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், க்யூட் (CUET)இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31, 2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரை