Posts

Showing posts from October 4, 2013
விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் சென்னை: குரூப் 2 தேர்வுக்கு, 6லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து,தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன்,கூறியதாவது:குரூப் 2தேர்வுக்கு, 6லட்சத்து, 85ஆயிரத்து, 198பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை,வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு,டிச., 1ம் தேதி, 115இடங்களில் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66பேர்,இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்'பணிக்கு, 39பேர் உட்பட, 1,064பணியிடங்களை நிரப்ப,இத்தேர்வு நடக்கிறது. குரூப்4தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.12லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில்,இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு,நவநீதகிருஷ்ணன் கூறினார்.
கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி. கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்தஇருக்கிறது. இதுவரை 2கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் உண்மையானதுதானா? எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-2முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும். அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த2ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலதாமதம் ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-2,இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதைப்போல,பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்த
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான கேள்வித்தாள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. இதையடுத்து,இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால்,மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக தமிழ் தவிர,பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும்,அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள2,881முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை21-ஆம் தேதி போட்டித் தேர்
முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும்? முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாடகேள்வித்தாளில, 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாககூறி, மதுரையைச் சேர்ந்த தேர்வர், உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாடதேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது,மேல் முறையீடு செய்வதா என டி.ஆர்.பி.,தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என,துற
"செட்' தேர்வு எப்போது? முதுநிலைப் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு கல்லூரி ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) குறித்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது "நெட்', மாநில அளவில் நடத்தப்படும் "செட்' ஆகிய தேர்வுகளில்தகுதி அல்லது பி.எச்டி.படிப்பை முடித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. செட் தேர்வை அந்தந்த மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 2015-ஆம் ஆண்டு வரை "செட்' தேர்வை நடத்த தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த"செட்' தேர்வு, இப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது. தேர்வுக்கான விளம்பரம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட &