Posts

Showing posts from July 31, 2016
மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு. மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மதிப்பெண்கள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்வர்கள் அவர்களுடைய மதிப்பெண்களை www.tangedco.gov.in இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகள் சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற இறுதி ஆணை பெறப்பட்ட பின் தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இன, இட, ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்விற்கு பிறகு, எழுத்து தேர்விற்கு 85 சதவீதமும், நேர்முக தேர்விற்கு 15 சதவீதமும் (10 மதிப்பெண் நேர்காணலுக்கும், 5 மதிப்பெண் கல்வித் தகுதியின் மதிப்பெண் சதவீதம்) கணக்கீடு செய்து இறுதியாக இன, இட சுழற்சி முறையை பின்பற்றி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு மின்வாரியம
பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, நாளை முதல், ஆக., 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், சீமாட்டி வெலிங்டன் கல்லுாரியில் கிடைக்குமாறு, தபாலிலோ, நேரிலோ அளிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட, 13 பாடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், 1,200 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதில், 20 சதவீத இடங்களுக்கு, இந்த ஆண்டு முதல், பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் ச