Posts

Showing posts from June 17, 2016
டி.என்.பி.எஸ்சி: குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குரூப் 1-க்கான முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. 79 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர். சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இளைநிலைவேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,241 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 எழுத்துதேர்வு கடந்தாண்டு ஜூலையில் நடந்தது. இதன் முடிவுகள் மே மாதத்தில் வெளியானது.  இத்தேர்வில் வெற்றிபெற்ற 12,337 பேருக்கு புதிய வினாத்தாள் முறையில் ஆகஸ்ட் 21ல் மெயின் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.கடந்த முறை மெயின்தேர்வு 120 வினாக்கள் கொள்குறி வகையில் கேட்கப்பட்டிருந்தது. புதிய முறையில் எவ்விதம் கேள்விகள் கேட்கப்படும் என்ற முழு விபரத்தை தெளிவுபடுத்தி வினாத்தாளின் மாதிரி அமைப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிடாததால், மாணவர்கள் மெயின்தேர்விற்கு தங்களை தயார் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஆயக்குடி இலவச பயிற்சிமைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில்,“குரூப்-2 மெயின்த
10ம் வகுப்பு துணைத்தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.  'பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககம், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விரைவில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், நாளை பிற்பகல் முதல், www.tngdc.gov.inஎன்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.  செய்முறை தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே, ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில், செய்முறை தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள், உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை, அவசியம் அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.