Posts

Showing posts from July 8, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது. அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்ட
Image
  நவோதயா பள்ளிகளில் 1,616 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? தெளிவான விளக்கம்! மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக கிடைக்கும். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்த பள்ளிகளில் குரூப் ஏ, குரூப் பிரிவில் பணிபுரிவதற்காக முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகள் என மொத்தம் 1616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி முதல்வர் பொறுப்புக்கு 12 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 397 பேர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 683 பேர், பயிற்சி அளிக்கப்பட்ட மூன்றாவது மொழி ஆசிரியர் பதவிக்கு 343 பேர், இதரவகை
Image
  பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து! வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம
Image
  அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது: 163 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. CBSE முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும். அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.64 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேவைக்கேற்ப கல்லூரிகளின் இடங்கள் 10% முதல் 15% வரை அதிகரிக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 2.2 லட்சம் மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் திட்டம் தொடங்கப்படும். 'நான் முதல்வன்' திட்டத்தின் படி பொறியியல் கல்லூ
Image
  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு..! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலிப் பணியிடங்களுக்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 2,180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1,091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத
Image
  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு? கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 163 கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட இளங்கலை படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, அரசு கலைக் கல்லூரிகளில் சேர நேற்று கடைசி நாள் ஆகும். அதன்படி, நேற்று மாலை நேர தகவலின் அடிப்படையில், 3 லட்சத்து 65 ஆயிரத்து 40 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில், 3 லட்சத்து ஆயிரத்து 274 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்திருப்பதாகவும், இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 332 பேர் கட்டணங்களை செலுத்தியிருப்பதாகவும் கூறப்பட
Image
  ஒளிமயமான எதிர்காலம் - நம்பிய லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் - Dr அன்புமணி இராமதாஸ்.! தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம் ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்து உள்ளனர் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1,300 கணக்கீட்டாளர்கள், 600 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 2,900 கள உதவியாளர் என மொத்தம் 5,300 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான 4 அறிவிக்கைகள் கடந்த 2020&ஆம் ஆண்டு ஜனவரி 1, பிப்ரவரி 15, மார்ச் 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. 18 உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தேர்வ
Image
  தற்காலிக ஆசிரியர் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பர்வதம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளியின் அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. குறிப்பாக இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், மேல் நடவடிக்கைகளை தொடர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகர், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான முந்தைய வழக்குகளில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவுகளை, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Image
  TNPSC Exam : கல்வி தொலைக்காட்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் - அலைவரிசை எண் வெளியீடு   போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலை வரிசை எண்களை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 20.03.2022-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள். ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சியின் அலை வரிசை எண்கள் பின்வருமாறு. ஏர்டெல் DTH- 821, சன் DTH- 33, TATA SKY DTH- 1554. CON d2h-597. TAC TV- 200, TCCL- 200. VK DIGITAL- 55, AKSHAYA- 17, SCV-98, GTPL- 99. பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் ம
Image
  அரசு கல்லுாரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம் சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், https://tngasa.in/ என்ற இணையதளத்தில், கடந்த 22ம் தேதி பதிவு துவங்கியது. விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை, 3.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிப்பதா அல்லது மாணவர் சேர்க்கை பணிகளை துவங்குவதா என்பது குறித்து, இன்று உயர்கல்வி துறை ஆலோசனை நடத்த உள்ளது.  உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், முதன்மை செயலர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் முடிவில், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.