Posts

Showing posts from November 9, 2016
Flash news:TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ! தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு இன்று வழங்குகிறது. தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25 வழி செய்கிறது. அதேபோல் அரசாணை எண்  71-ன் படி 'வெயிட்டேஜ்’ முறையும் ஆசிரியர் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதி தேர்வில் மதிப்பெண் விலக்கு என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று விதிகள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் மதிப்பெண் விலக்கு வழங்குவது சரியல்ல என்றும், 'வெயிட்டேஜ்' முறை பின்பற்றப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன்
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவே இந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பொ
'நெட்' தேர்வு விண்ணப்பம் : நவ., 15ல் முடியுது அவகாசம் பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  மத்திய அரசின் உதவித்தொகையில், பல்கலைகள், கல்லுாரிகளில் முழுநேர ஆராய்ச்சி மாணவராக சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.  ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடக்கிறது.  அதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, அக்., 15ல் துவங்கியது. விண்ணப்பிக்கும் அவகாசம், நவ., 15ல் முடிகிறது. இதற்கு, ஒரு வாரமே உள்ளது. ஜூலையில் நடந்த, 'நெட்' தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால், பட்டதாரிகள் பலர், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதா; வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர். 'இந்த வார இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ! தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு இன்று வழங்குகிறது. தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25 வழி செய்கிறது. அதேபோல் அரசாணை எண்  71-ன் படி 'வெயிட்டேஜ்’ முறையும் ஆசிரியர் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதி தேர்வில் மதிப்பெண் விலக்கு என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று விதிகள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் மதிப்பெண் விலக்கு வழங்குவது சரியல்ல என்றும், 'வெயிட்டேஜ்' முறை பின்பற்றப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன்
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கையால் அச்சப்பட தேவையில்லை-அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம். செல்லத்தகுந்த இடங்கள் : விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவ., 11-ம் தேதி வரை செல்லுபடியாகும். அதேசமயம் காசோலை, டி.டி., கிரடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை. அடையாள அட்டை அவசியம்: தற்போதைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம். உச்சவரம்பு : 18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வங்கியில் எடுக்கலாம். 19ம் தேதியிலிருந்து வங்கி பரிவர்த்தனையின் உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயம் தேவையில்லை : மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நேர்மையான வழியில் பணம் சம்பாதித்த மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. அடுத்த இரண்டு நாட்கள் நாட்டு மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டாலும், புதிய உலகிற்கு இந்தியா வல்லரசாக அடியெடுத்து வைத்துள