Posts

Showing posts from August 16, 2013
குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி சென்னை நேர்முகத்தேர்வுடன் கூடிய 1,059 சார்நிலை பணி இடங்களை நிரப்புவதற்கானகுரூப்–2 தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– குருப்–1 மெயின் தேர்வு துணை கலெக்டர், டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம்16–ந்தேதி முதல்நிலைத்தேர்வை நடத்தினோம். இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம்16–ந்தேதி வெளியிடப்பட்டது.அடுத்த கட்ட தேர்வான மெயின் எழுத்துத்தேர்வுக்கு ‘ஒரு காலி இடத்திற்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் மொத்தம் 1,391 பேர் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர். முதல்நிலைத்தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களையும்
ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட்17, 18ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டுபிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மனுதாரர் கருப்பையா கோரிக்கைபடி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தார். கருப்பையா மனுவுக்கு தமிழக அரசு 2வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மனு விபரம் தமிழகத்தில் ஆகஸ்ட்17, 18தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ஆதி திராவிடர்,பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இட ஓதுக்கீடு அளிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் வழி உள்ளது. தேர்வு நடத்தும் மாநிலங்கள் ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம் என விதி உள்ளது. சில மாநிலங்கள் ஆதி திராவிடர்,பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்தியுள்ளன. எனவே தமிழக அரசும் ஆதி திராவிடர்,பழங்குடியினர
நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள் சென்னை: ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவங்குகிறது. நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள். இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. முதல் தேர்வை, 7 லட்சம் பேர் எழுதிய போதும், வெறும், 3,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த தேர்வில், 19 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய