Posts

Showing posts from April 26, 2024
Image
  மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன.  இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற
Image
  மாவட்ட கல்வி அலுவலர் ஆக நல்ல வாய்ப்பு... TNPSC குரூப் 1C தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க! டிஎன்பிஎஸ்சி குரூப் 1C பதவிகளில் ஒன்று தான் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணி. இந்த பதவிக்கான தகுதிகள் என்ன, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கிறோம். காலியிடங்கள்: மாவட்ட கல்வி அலுவலர், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பொது போட்டி தேர்வர்கள் - 6 அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வகை தேர்வர்கள் - 2 தகுதிகள்: - மாவட்ட கல்வி அலுவலர் பொதுத் தேர்வர்கள் கணிதவியல், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஏதேனும் ஒரு படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடைநிலை அல்லது முன் பல்கலைக்கழக படிப்பு அல்லது மேல்நிலைப் படிப்பில் பகுதி ஒன்று அல்லது பகுதி 2 தமிழை கட்டாயமாக படித்திருக்க வேண்டும். மாநிலத்தின் அங்கீகரிக்
Image
  தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் புதிதாக 3.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளி கல்வி துறை தகவல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எண்ணிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 மாதாந்திர ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அரசு பள்ளிகள் நுழைவு வாயில் முன்பு விளம்பர அறிவிப்பும் வைக்கப்படுகின்றன. கணிசமாக அதிகரிப்பு: வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் ச
Image
 "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது" - ராமதாஸ் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம் செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளு