26 November 2016

TET தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு

'2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது.


இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது. 'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் .

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். 


இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 




செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும். இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...