Posts

Showing posts from April 10, 2023
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடிப் பணி நியமனம் வழங்குக- அண்ணாமலை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடிப் பணி நியமனம் வழங்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம், இன்னுமொரு போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் செய்யும் அரசாணை எண் 149 ஐ அமல்படுத்தத் துடிக்கிறது திறனற்ற திமுக அரசு. ஏற்கனவே 12/02/2022 அன்று, தமிழக பாஜக சார்பில், 'நீட் தேர்வுக்கு மறுப்பு ஆனால் டெட் தேர்வுக்கு விருப்பு' என்ற தலைப்பிட்ட அறிக்கையில், ஆசிரியர் பணி நியமனங்களில் திமுகவின் இரட்டை வேடம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம். தற்போது, பள்ளிக் கல்வித் துறை ஆணையர், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்து போது, அரசாணை எண் 149 ஐக் கடுமையா
Image
  10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் எழுத்துப் பிழை, தவறு.. இவ்வளவு கவனக்குறைவு சரியா?- வெடிக்கும் சர்ச்சை 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகள் முறையாகக் கேட்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி) ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 12,800 பள்ளிகளில் உள்ள 3,986 தேர்வு மையங்களில், சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர்.  வழக்கமாக 1,2,3 ஆகிய கேள்விகள் SYNONYMS (அருஞ்சொல் பொருள்) ஆகவும் 4,5,6 ஆகியவை ANTONYMS (எதிர்ச் சொல்) ஆகவும் கேட்கப்படும். ஆனால் இன்று கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று அச்சிடப்படவில்லை. இதனால் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்தனர். இந்தக் கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Image
  TNPSC Group 4 - சான்றிதழ் பதிவேற்ற அறிவிப்பு 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், மார்ச் 24ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு, 2.5 பேர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பட்டியலை, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதில், 25 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் பதிவெண் உள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 'ஸ்கேன்' செய்து, 'இ - சேவை' மையம் வழியாக, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், வரும் 13ம் தேதி முதல் மே 5ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.