7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்-Dinamani
பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்
வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களில் சில துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.
பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?
இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.