மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்
பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள் 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.
நேரடி டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
முன்பு நேரடி டி.இ.ஓ. நியமனத்துக்கு ஒரேயொரு தேர்வுதான் நடத்தப்பட்டு வந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் படித்த பட்ட மேற்படிப்பில் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண் கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 40 மதிப்பெண்.
தேர்வு முறையில் மாற்றம்
பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் சேர்த்து (340) அதன் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டன. அப்போது டி.இ.ஓ. தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்தனர். குரூப்-1 தேர்வைப் போன்று டி.இ.ஓ. தேர்வுக்கும் முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
அதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் கேள்விகள் சேர்க்கப் பட்டன. முதன்மை தேர்வில் 3 தாள்களை கொண்டுவந்தனர். முதல் இரு தாள்களில் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். அதேபோல், 3-வது தாளில் கல்வியியல் பாடத்தில் இருந்து ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இந்த நிலையில், டி.இ.ஓ. தேர்வில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதன்மைத் தேர்வில் 3-வது தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களின் பட்ட மேற்படிப்பு பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொது அறிவைப் போல விரிவாக பதில் எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 11 காலியிடங்களை நிரப்ப தேர்வு தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் முதுகலை பட்டதாரிகள் மார்ச் 12-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் ( www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
15 February 2014
TET I சென்னை உயர்நீதிமன்றத்தில்
17 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன். 17 .02.14ல் பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது.
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.
அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து அரசாணை 252 ஐ இரத்து செய்யக்கோரி வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காகவழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும்முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யஅரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும்,பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ.ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில்பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன்.
2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது. அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும்பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர்தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150.
இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை. இதற்கு மேற்குறிப்பிட்டநான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையான மதிப்பெண்களுக்கு ஏற்றவிகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றவருக்கும், 104 மதிப்பெண் பெற்ற எனக்கும் ஒரே மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதே நேரம், என்னை விட ஒரேயொரு மதிப்பெண் கூடுதலாக (105 மதிப்பெண்கள்) பெற்றவருக்கு என்னை விட அதிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.எனவே, இந்த முறை சட்ட விரோதமானது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14)விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...