12 September 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு நாளை மறுநாள் (14.09.2016) அன்று விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அவர்கள் வழக்கு அன்றுடன் முடிந்துவிடும் என்றும் அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளதாக கூறியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,
'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்

ஜன., 22ல் 'நெட்' தேர்வு

உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பான, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடித்தோர், கல்லுாரி, பல்கலைகளில் உதவிப் பேராசிரியராக, மத்திய அரசின் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
முதுநிலை படிப்பை முடித்தோர், ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, மத்திய அரசின் நிதி உதவி பெறவும், இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு ஜூலையில் முடிந்து விட்ட நிலையில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடத்தப்பட உள்ளது. 'இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...