10 February 2014

இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் SLP போட முயற்சி 

சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 9.2.2014 அன்று வழக்குரைஞரை சென்னையில் சந்திந்து உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் மனு போடுவது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர். எனவே ஒரு வார காலத்திற்குள் புது தில்லி சென்று உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 எனவே இவ்வழக்கில் தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. திரு.இரா.கணேஷ் - 9976105153 ( சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்) 
2. திரு.மு.கலியமூர்த்தி - 9894718859 ( விழுப்புரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்)
3. திரு.ப.பாண்டியன் - 9894192500 ( திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்) மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு வழக்கில் இணைபவர்களின் பெயர்கள் விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வங்கி துறையில் ஓய்வு பெறுவோர் அதிகரிப்பு : 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு-Dinakaran 

 புதிய வங்கி கிளைகள் திறக்கப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த துறையில் வரும் ஆண்டுகளில் 50 சதவீதம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதனால், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

புதிய வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி மற்றும் வங்கி சேவையை புறநகர், கிராம பகுதிகளுக்கும் விரிவு படுத்தும் முயற்சிகள் மூலம் இந்த துறையில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. மனித வளம் தொடர்பான ஆலோசனை மற்றும் சேவையில் உலகில் 2வது இடத்தில் இருக்கும் ராண்ட்ஸ்டன் இந்தியா, ‘2014ம் ஆண்டில் வங்கிகளில் வேலை வாய்ப்பு மற்ற துறைகளை விட அதிகமாக இருக்கும். இந்த துறையில் சுமார் 7 முதல் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த துறையில் இடைநிலை மற்றும் கீழ் மட்டத்தில் உள்ளவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் ஓய்வு வயதை எட்டியுள்ளதால், இந்த வகையில் மட்டும் 5 முதல் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகலாம் என இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுபோல், வங்கி சேவை விரிவாக்கப்படுவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18 முதல் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என கணித்துள்ளது. 

மணிபால் அகாடமி ஆஃப் பாங்கிங், ‘இந்த துறையில் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என தெரிவித்துள்ளது.இதுதவிர, புதிதாக வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். 

கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சம் பேர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வேலைக்காக விண்ணப்பம் செய்துள்ளதாக ஒரு தனியார் நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கும், தனியார் வங்கிகளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இனி வெயிட்டேஜ் மதிப்பெண் : திறமைசாலிகளுக்கு பாதிப்பு, பட்டதாரிகள் கடும் அதிருப்தி

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் களால் திறமை மிகுந்த பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர். 

அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தகுதித் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு 2009ல் கொண்டு வந்த கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள் ளது. தமிழகத்தில் 2012, 2013ல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 60% மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் தது. 
பிறகு, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடுவோம் என்றும் அறிவித்தது.

இட ஒதுக்கீடு சமூகத்தினருக்கு அரசு 5 சதவீத மதிப்பெண் குறைத்துள்ளது. ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அப்படியே நடைமுறையில் உள்ளது. இதனால் திறமையானவர்கள் பாதிக்கப்படுவதாக பட்டதாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவதற்காக 2012ல் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. 

அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது. அதில் மேனிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15, டிடிஎட், டிஇஇஎட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60 என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. 

பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் என்பது மேனிலைத் தேர்வுக்கு 10, பட்டப்படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என மொத்தம் 100 என நிர்ணயிக்கப்பட்டது. இதில் பிரச்னை, தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற்றவருக்கும், 69 சதவீத மதிப்பெண்கள் (104) பெற்றவருக்கும் வெயிட்டேஜ் முறையில் 42 மதிப்பெண் களே கிடைக்க வாய்ப்புள் ளது. இதனால் 104 மதிப்பெண் பெற்றவர் பாதிக்கப்படுகிறார்.
 பிஎட், பட்டப் படிப்பு ஆகியவற்றில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவரும், 69 சதவீத மதிப்பெண் பெற்றவரும் வெயிட்டேஜ்படி சமமாக 12 மதிப்பெண்களே பெற வாய்ப்புள்ளது. 

 மேனிலைத் தகுதிக்கு (50% 60%வரை) 2 மதிப்பெண்கள், பட்டப் படிப்பு தகுதிக்கு(50%70% வரை) 12 மதிப்பெண், பிஎட் தகுதிக்கு (50%70% வரை) 12 மதிப்பெண், டிஇடி தேர்வுக்கு (60%70% வரை) 42 மதிப்பெண்கள் என மொத்தம் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது. 

இதன்படி பார்த்தால் 1ம் எண் நபருக்கும், அதிக மதிப்பெண் பெற்றுள்ள 2ம் எண் நபருக்கும் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது. இதனால் 2ம் எண் நபர் பாதிக்கப்படுகிறார். இட ஒதுக்கீட்டு முறையின் கீழ் வராதவர்கள் மேற்கண்ட முறையில் வெயிட்டேஜ் பெறும்போது யார் திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது. எனவே வெயிட்டேஜ் முறையில் அரசு மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...